கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், முடிவில் 1800 டாலர்களுக்கும் கீழாகவே இருந்து வருகின்றது.
இது இன்று எப்படியிருக்கும்? விலை குறையுமா? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய கமாடிட்டி சந்தைகளில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இன்று வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன?
நிபுணர்கள் கூறியதை போல தங்கம் விலை மீண்டும் உச்சத்தினை தொடுமா? அல்லது இப்படியே சரிவினைக் காணுமா? முக்கிய லெவல்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலை அவுன்ஸூக்கு $1800 கீழ்
தங்கம் விலையானது தொடந்து கடந்த சில தினங்களாகவே ஏற்றம் காணத் தொடங்கினாலும், முடிவில் குறைந்து 1800 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. இது வர்த்தகர்கள் மத்தியில் சற்றே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
ஓமிக்ரான் வைரஸ் குறித்த அச்சம்
தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் வைரஸின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது சாதரண வைரஸினை விட பலமடங்கு வேகத்தில் பரவக்கூடிய தன்மை உடையதாக கூறப்படுகிறது. இதனால் உலக சுகாதார மையமே இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பல நாடுகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
சரியும் பத்திர சந்தை
அமெரிக்காவின் பத்திர சந்தையானது, நுகர்வோர் நம்பிக்கையானது குறைந்து வரும் நிலையில் சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விரைவில் வட்டியில் மாற்றம் செய்யலாம்
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் ஓமிக்ரான் கொரோனாவின் தாக்கம் எதுவும் இல்லை. இது கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர்கள் பெரும் உதவியாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில், விரைவில் அமெரிக்காவில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 7.90 டாலர்கள் அதிகரித்து, 1,796 டாலர்களாக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.
காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை சற்றே ஏற்றத்தில் காணப்படும் நிலையில், வெள்ளி விலையானது வெள்ளி விலையும் சற்று பலமான ஏற்றத்தில் காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது 2.12% அதிகரித்து, அவுன்ஸூக்கு, 23.625 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து, 47,735 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகத் தொடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளியின் விலை ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 625 ரூபாய் அதிகரித்து, 62,670 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 62,045 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 63,011 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 4,538 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 36,304 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 16.50 ரூபாய் அதிகரித்து, 4,950.50 ரூபாயாகவும், சவரனுக்கு 132 ரூபாய் அதிகரித்து, 39,604 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,505 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 67.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 676 ரூபாயாகவும், கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 67,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள், தங்கம் மற்றும் வெள்ளியின் கான்ட்ராக்ட்கள் டிசம்பர் 3, 2021 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம். ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்பதால் வாங்கலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!



Click it and Unblock the Notifications