தங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இனியும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

இது தங்க ஆர்வலர்களுக்கும், தங்க வர்த்தகர்களுக்கும் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், இது இன்னும் சரியுமா? அல்லது அதிகரிக்குமா? அடுத்த முக்கிய லெவல் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்றைய விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தொடர் சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. இன்று எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன! தொடர் சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. இன்று எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன!

தொடர்ந்து $1800 கீழ் தங்கம்

தொடர்ந்து $1800 கீழ் தங்கம்

தங்கம் விலையானது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது. இது உணர்வுபூர்வமான முக்கிய சப்போர்ட் விகிதமாகவும் பார்க்கப்படுகிறது. ஆக இதனை அவ்வப்போது உடைத்துக் காட்டினாலும், தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே தங்கம் விலையானது முடிவடைந்து வருகின்றது

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகளில் ஓமிக்ரான் வைரஸின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளிலும் விமான போக்குவரத்துகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு அதிகரித்தால், லாக்டவுன் கட்டுப்பாடுகள் வரலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும் தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் அத்தகைய நிலை வராது என நிபுணர்கள் கூறிவருவது கவனிக்கதக்க விஷயமாக உள்ளது.

சரிவில் பத்திர சந்தை

சரிவில் பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையானது 1.51% சரிவினைக் கண்டுள்ளது. அதே நேரம் அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. அமெரிக்காவில் விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வட்டி அதிகரிக்கலாம்

விரைவில் வட்டி அதிகரிக்கலாம்

டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், இதற்கிடையில் வட்டி விகிதமும் விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது குறித்து டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 8.35 டாலர் அதிகரித்து, 1,793.60 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் கிட்டதட்ட 2% அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது 1.81% அதிகரித்து, அவுன்ஸூக்கு, 23.265 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 123 ரூபாய் அதிகரித்து, 47,710 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 237 ரூபாய் அதிகரித்து, 61,877 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,640 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,632 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, 4,515 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து, 36,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 24.50 ரூபாய் குறைந்து, 4,926 ரூபாயாகவும், சவரனுக்கு 196 ரூபாய் குறைந்து, 39,408 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,260 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. கிராமுக்கு 1.10 ரூபாய் குறைந்து, 66.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 665 ரூபாயாகவும், கிலோவுக்கு 1,100 ரூபாய் குறைந்து, 66,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியின் கான்ட்ராக்ட்கள் டிசம்பர் 3, 2021 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 30th 2021: gold jewellery prices fall a day after rise, What experts predict?

Gold prices on November 30th 2021: gold jewellery prices fall a day after rise, What experts predict?/ தங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இனியும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X