தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் இரண்டாம் நாளாக.. எவ்வளவு குறைஞ்சிருக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கம் என்றாலே ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது, வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல் முதலீடுகளிலும் முக்கியத்துவம் கொண்டுள்ளதாக மாறியுள்ளது. அதிலும் தற்போது தந்தோராஸ், தீபாவளி, அதனைத் தொடர்ந்து புத்தாண்டு என பல விழாக்கள் உள்ளன. இதற்கிடையில் திருமண விழாக்களும் உள்ளன.

இதனால் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இதற்கிடையில் இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியும் விதமாகவே காணப்படுகிறது.

ரூ.3,000 சரிவில் தங்கம் விலை.. இந்த தீபாவளிக்கு வாங்கலாமா.. இந்த ஆண்டு எப்படியிருக்கும்..! ரூ.3,000 சரிவில் தங்கம் விலை.. இந்த தீபாவளிக்கு வாங்கலாமா.. இந்த ஆண்டு எப்படியிருக்கும்..!

சற்றே சரிவில் தங்கம் விலை

சற்றே சரிவில் தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது கடந்த அமர்வில் சற்று குறைந்திருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச சந்தையில் தொடர்ந்து அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. ஆக இது மேற்கொண்டு சற்று அழுத்தத்தில் இருக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தில் செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர். இதனால் தங்கம் விலையானது பெரியளவில் வீழ்ச்சி காணாவிட்டாலும் சரிவில் காணப்படுகின்றது.

குறைந்த விலை வாங்க தூண்டலாம்

குறைந்த விலை வாங்க தூண்டலாம்

தங்கம் விலையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்து வரும் நிலையில், அது மேற்கொண்டு நீண்டகால முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம். இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 8,700 ரூபாய்க்கு மேலாக சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் வரலாம் என்ற நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கத்தினை எதிர்த்து போராடவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான கவலைகளை களையவும் மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த கூட்டத்தில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க அறிவிப்புகள் வருமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

முதலீடுகள் குறையலாம்

முதலீடுகள் குறையலாம்

பத்திரம் வாங்குதலை குறைத்து, வட்டி விகிதத்தினை அதிகரித்தால், பத்திர சந்தையினை ஊக்குவிக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம். இதேபோன்று பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டியினை அதிகரிக்கலாம். இது தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஃபெடரல் வங்கியின் இன்றைய அறிவிப்பினை கவனமாக முதலீட்டாளார்கள் கவனித்து வருகின்றனர்.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் 47,500 ரூபாய் மற்றும் 47,100 ரூபாயாகும். இதே ஏற்றம் கண்டால் 47,900 ரூபாயினை தொடலாம் என கணித்துள்ளனர். இதே போல வெள்ளியின் சப்போர்ட் விலை 63,500 ரூபாயாகவும், இதனை உடைத்தால் 61,200 ரூபாய் வரையில் செல்லலாம் என ஸ்வஸ்திகா தரகு நிறுவனம் கணித்துள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 6.40 டாலர்கள் குறைந்து, 1782.95 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலை சரியும் விதமாக காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 23.483 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 205 ரூபாய் குறைந்து, 47,415 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,622 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 47,584 ரூபாயாகவும் தொடங்கியது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலயானது இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிண்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 223 ரூபாய் குறைந்து, 63,000 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 63,223 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 63,153 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. மேலும் நேற்றைய குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளியின் விலையும் குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 4,482 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து, 35,856 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, 4,870 ரூபாயாகவும், சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து, 39,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 1.30 பைசா குறைந்து, 67,60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 676 ரூபாயாகவும், கிலோவுக்கு 1,300 ரூபாய் குறைந்து, 67,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 3rd 2021: Gold prices fall amid of US federal policy meet outcome

Gold price latest updates.. Gold prices on November 3rd 2021: Gold prices fall amid of US federal policy meet outcome/ தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் இரண்டாம் நாளாக.. எவ்வளவு குறைஞ்சிருக்கு.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X