டெல்லி: எதிர்பார்த்ததைபோலவே அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலையானது குறைந்து காணப்படுகின்றது.
அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையால், டாலரின் மதிப்பானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு பத்திர சந்தையும் ஏற்றம் காணலாம் என்ற நிலையில், வட்டியில்லா முதலீடான தங்கம் விலையானது சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது.
கடந்த புதன் கிழமையன்றே பணவீக்கத்தினை குறைக்கும் பொருட்டு, மத்திய வங்கியானது வட்டி அதிகரிப்பு செய்தது. இந்த நிலையில் தங்கம் விலையானது தொடர்ந்து மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 26.65 டாலர்கள் குறைந்து, 1623.45 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 3.02% குறைந்து, 19.003 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் தற்போது 10 கிராமுக்கு 566 ரூபாய் குறைந்து, 50,040 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் தற்போது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 1415 ரூபாய் குறைந்து, 57,375 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்றே குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 4730 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து, 37,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 28 ரூபாய் இறைந்து, 5144 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து, 41,152 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 280 ரூபாய் குறைந்து, 51,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. இது கிராமுக்கு 50 பைசா குறைந்து, 64 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 640 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 64,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.47,150
மும்பை - ரூ.46,700
டெல்லி - ரூ.46,850
பெங்களூர் - ரூ.46,750
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,150


Click it and Unblock the Notifications