டெல்லி: அமெரிக்க மத்திய உள்பட பல்வேறு மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1618 டாலர்கள் என்ற லெவலில் காணப்பட்டது.
இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படுகிறது.
சீனாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, தென் கொரியா பிரச்சனை என பலவும் பணவீக்கத்தினை அதிகரிக்கின்றன. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
டாலர் மதிப்பு உச்சத்தினை காணத் தொடங்கியிருந்தாலும், இது தொடருமா? என்ற அச்சமும் இருந்து வருகின்றது.. ஏனெனில் கடந்த அக்டோபர் மாதத்தில் மீண்டும் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இதே உற்பத்தி குறித்தான விகிதம் என பலவும் சரிவினைக் கண்டுள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 23.10 டாலர்கள் அதிகரித்து, 1653.40 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 2.89% அதிகரித்து, 19.992 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் தற்போது 10 கிராமுக்கு 267 ரூபாய் அதிகரித்து, 50,451 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 817 ரூபாய் அதிகரித்து, 59,140 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்றே அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 4706 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, 37,648 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5134 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 41,072 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 51,340 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. இது கிராமுக்கு 64 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 640 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 64,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.47,060
மும்பை - ரூ.46,100
டெல்லி - ரூ.46,250
பெங்களூர் - ரூ.46,150
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,006
More From GoodReturns

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?



Click it and Unblock the Notifications