எல்லா சான்ஸும் போச்சா.. இனி நடுத்தர மக்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா.. இன்று தங்கம் விலை எப்படி?

டெல்லி: அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல்வேறு மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வந்தாலும் கூட, சமீபத்திய நாட்களாகவே தங்கம் விலையானது ஏற்றத்தில் இருந்து வருகின்றது. இது தங்கம் விலையானது அதன் 1 மாத குறைந்தபட்ச விலையினை எட்டியிருந்த நிலையில் தற்போது அந்த குறைந்தபட்ச லெவலில் இருந்து மீட்சி காணத் தொடங்கியுள்ளது.

இது அவுன்ஸுக்கு 1676 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகிறது. கடந்த வாரம் இது அவுன்ஸுக்கு 1618 டாலர்கள் என்ற லெவல் வரையில் சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் கடந்த வாரத்தில் இந்திய சந்தையில் சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது 1.27% ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

இனி எப்படியிருக்கும்?

இனி எப்படியிருக்கும்?

அமெரிக்க டாலரின் மதிப்பானது 113 டாலர்களில் இருந்து 111 டாலர்கள் என்ற லெவலை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் தங்கம் விலையானது உச்சத்தினை எட்டியது. ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து 4வது முறையாக வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இது வட்டி விகிதம் அதிகரிப்பு என்பது கணிசமாக குறையலாமோ என்ற நம்பிக்கையை உடைத்தது.

 சீனாவிலும் தேவை அதிகரிக்கலாம்

சீனாவிலும் தேவை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் சீனாவில் நிலவி வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில், ஜீரோ கோவிட் பாலிசியானது அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு தேவை சரியலாம் என்றாலும், யுவானின் மதிப்பு சரிவில் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது ஏற்றம் காண வழிவகுக்குத்துள்ளது. இது தங்கத்திற்கான தேவையையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

இதற்கிடையில் தங்கத்தின் விலையானது 1620 - 1685 என்ற லெவலை உடைத்தால், அவுன்ஸூக்கு 1710 டாலர் என்ற லெவலையும் உடைக்கலாம். இந்திய சந்தையிலும் உடனடியாக 51,300 - 51,800 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர்கள் தங்கம் விலையானது தொடர்ந்து பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தொடர்ந்து உச்சத்தினை எட்டலாம் என கூறுகின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1675.55 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்கவிலையும் 1676 ஆகவே உள்ளது. எனினும் அதிகபட்ச விலை, குறைந்த விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது தங்கத்தினை போலவே சற்று குறைந்து, 20.695 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் 20.570 டாலராக உள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்த பட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது 10 கிராமுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 50,922 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் தற்போது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 176 ரூபாய் குறைந்து, 60,360 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்றே தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணபட்டாலும், ஆபரண தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4775 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 38,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5210 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 41,680 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து, 52,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. இது கிராமுக்கு 66.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,750

மும்பை - ரூ.46,900

டெல்லி - ரூ.47,050

பெங்களூர் - ரூ.46,950

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,750

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+