சாமனியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல.. தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கம் என்றாலே மிகவும் கவர்ச்சிகரமான உணர்வுபூர்வமான ஆபரணமாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

அதே நவம்பர் 8.. பணமதிப்பிழப்பு டூ ஐபிஓ.. அசத்தும் பேடிஎம்..!அதே நவம்பர் 8.. பணமதிப்பிழப்பு டூ ஐபிஓ.. அசத்தும் பேடிஎம்..!

ஏன் என்ன காரணம்? தொடர்ந்து தங்கம் விலையானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது? இன்றைய சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம்? ஆபரண தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

விலை இன்னும் அதிகரிக்கலாம்

விலை இன்னும் அதிகரிக்கலாம்

குறிப்பாக சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை அதிகரித்து வருகின்றது. இது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் இருந்து வரும் பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில், தங்கம் விலையானது தொடர்ச்சியாக 3வது நாளாக தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றது.

தங்கத்தின் முக்கிய லெவல் உடைப்பு

தங்கத்தின் முக்கிய லெவல் உடைப்பு

வெள்ளியின் விலையும் இதே போல சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இதுவும் இன்னும் விலை அதிகரிக்கலாம் என்பது போலவே காணப்படுகின்றது. குறிப்பாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு தொடர்ச்சியாக ஏற்றம் காணலாம் என்ற நிலையில், முக்கிய லெவலான 1821 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வரும் நாட்களிலும் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

டாலர் மதிப்பு
 

டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனினும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், சில தினங்களுக்கு முன்பு வட்டி விகிதம் அதிகரிப்பு பற்றிய கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று கூறியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் எச்சரிக்கையாக இருக்க தூண்டியுள்ளது எனலாம். ஏனெனில் இது இன்னும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கை

பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கை

அமெரிக்காவின் பத்திரம் வாங்குதல் நடவடிக்கையானது நடப்பு மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனினும் வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

அமெரிக்காவில் தற்போது வட்டி விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலையில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், தற்போதைக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்ற நிலையே இருந்து வருகிறது. இது அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் வட்டி விகிதம் என்பது மிகக் குறைவாகவே இருந்து வருகின்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே பல நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தில் பெரியளவில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், அந்தந்த நாடுகளின் கரன்சிகள் வலுப்படுத்தும் விதமாகவும் இருந்து வருகிறது. இது மேற்கொண்டு பணவீக்கத்திற்கு ஊக்கத்தினை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலையானது அதிகரிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சீனாவின் பொருளாதார நிலை

சீனாவின் பொருளாதார நிலை

சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சில நகரங்களில் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மேற்கொண்டு மெதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். ஏற்கனவே மெதுவான வளர்ச்சி கண்டு வரும் சீனாவின் பொருளாதாரம், இதனால் மேற்கொண்டு இன்னும் மெதுவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஊக்குவிப்பு நடவடிக்கை

அமெரிக்காவின் ஊக்குவிப்பு நடவடிக்கை

அமெரிக்க அரசு ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, ஊக்கத் தொகையினை அறிவித்துள்ளது. இது மேற்கொண்டு அந்த நாட்டின் விமானம், தரை வழி பாதை, மேம் பாலங்கள் உள்ளிட்ட பலவற்றையும் மேம்படுத்தும் என்பதால், இதுவும் நீண்ட கால நோக்கில் அமெரிக்காவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் வாங்கலாமா

இந்த இடத்தில் வாங்கலாமா

நீண்ட கால நோக்கில் தங்கத்தினை விலையானது தொடர்ந்து அதிகரிக்கும் விதமாகவே இருப்பதால், இது நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. மீடியம் டெர்மிலும் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 4.20 டாலர்கள் அதிகரித்து, 1820.85 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 1% அதிகரித்து, 24.337 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 52 ரூபாய் அதிகரித்து, 48,024 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,972 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 48,000 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 347 ரூபாய் அதிகரித்து, 64,679 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 64,332 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 64,602 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 4,544 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 35,352 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 4,957 ரூபாயாகவும், சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 39,656 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,570 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 69.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 691 ரூபாயாகவும், கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 69,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்களும் வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கலாம் என்பதால் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 8th 2021: Gold price today remain rise in 3rd day in MCX & Comex

Gold price latest updates.. Gold prices on November 8th 2021: Gold price today remain rise in 3rd day in MCX & Comex/ சாமனியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல.. தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை..!
Story first published: Monday, November 8, 2021, 11:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X