3 நாள் ஏற்றத்திற்கு பிறகு இன்று சரிந்த தங்கம் விலை.. இது ஜாக்பாட் தான்..!

டெல்லி: தங்கம் விலையானது (gold) தொடர்ந்து கடந்த வார இறுதியில் இருந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இந்த வார தொடக்கத்திலும் தொடர்ந்தது. இது இனியும் ஏற்றம் காணலாமோ என்ற அச்சம் இருந்து வந்தது.

எனினும் மறுபுறம் தொடர்ந்து அமெரிக்கா டாலரின் மதிப்பு பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. சொல்லப்போனால் இது மூன்று வாரத்தில் இல்லாத அளவுக்கு 110 டாலர் என்ற லெவலில் காணப்பட்டது. இதற்கிடையில் ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்தில் வேலை குறித்தான தரவும் வெளியாகவுள்ளது. இது மேற்கொண்டு சாதகமாக அமையலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

இதற்கிடையில் இந்த வாரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது மட்டும் அல்ல அமெரிக்காவில் பணவீக்கம் குறித்தான தரவும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஓன்றாக உள்ளன. இதற்கிடையில் சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசியும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையில் பெரும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீன சந்தைகளில் மீண்டும் பணவீக்கம் என்பது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

'தொடர்ந்து டாலரின் மதிப்பு வலுவிழந்து காணப்படும் நிலையில் மீடியம் தங்கம் விலையானது தற்போது குறைந்திருந்தாலும்,மீண்டும் அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 8.80 டாலர்கள் குறைந்து, 1671.40 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கே சற்று வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது தங்கத்தினை போலவே குறைந்தே, காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்றைய தொடக்க விலையும் கீழாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 4758 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 38,064 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 5190 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 41,520 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து, 51,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 66.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 667 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,580

மும்பை - ரூ.46,800

டெல்லி - ரூ.47,950

பெங்களூர் - ரூ.46,850

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,580

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+