தடுமாறும் தங்கம் விலை.. இனி கூடுமா, குறையுமா.. கணிப்புகள் சொல்வதென்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது.

 

இது நீண்ட கால நோக்கில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் இன்று சற்று சரிவில் காணப்படுவது, மேற்கொண்டு சரிவினை காணுமா என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் தற்போதைய நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? கவனிக்க வேண்டிய சாதக பாதகமான காரணிகள் என்ன? முக்கிய லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அதே நவம்பர் 8.. பணமதிப்பிழப்பு டூ ஐபிஓ.. அசத்தும் பேடிஎம்..!அதே நவம்பர் 8.. பணமதிப்பிழப்பு டூ ஐபிஓ.. அசத்தும் பேடிஎம்..!

முக்கிய காரணம் என்ன

முக்கிய காரணம் என்ன

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு துறையை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத் தொகையினை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதே மேற்கொண்டு உட்கட்டமைப்பு துறையை, குறிப்பாக ரயில்வே, பாலங்கள், விமானத்துறை உள்ளிட்டவற்றை மேம்படுத்த உதவும் என்ற நிலையில், இது நீண்டகால நோக்கில் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமையும் என்ற நிலையில், இது பாதுகாப்பு புகலிடத்திற்கு எதிரான ஒரு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

வலுவான டாலரின் மதிப்பு

வலுவான டாலரின் மதிப்பு

தொடர்ந்து மீண்டும் பத்திர சந்தையானது ஏற்றம் காண தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவாக காணப்படுகின்றது. இது பெரிய அளவில் ஏற்றம் காணாவிட்டாலும், தொடர்ந்து வலுவான நிலையிலேயே இருந்து வருகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை சரிவுக்கு வழிவகுத்துள்ளது. எப்படி இருப்பினும் அமெரிக்காவின் வட்டி விகிதமானது, தற்போதைக்கு அதிகரிக்காது என்பது நீண்ட கால நோக்கில், தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தில் ஏற்படும் அதிக சரிவை தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய டேட்டாக்கள்
 

முக்கிய டேட்டாக்கள்

வரவிருக்கும் அமர்வுகளில் வெளியாகவிருக்கும் வேலை குறித்த தரவுகள், பணவீக்க விகிதம், மத்திய வங்கிகளின் அறிவிப்புகள் உள்ளிட்ட பலரும் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன. இதற்கிடையில் வட்டியில்லா முதலான தங்கத்தில், இந்த சமயத்தில் முதலீடுகள் குறைய வாய்ப்பு இருப்பதால், தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. எப்படியிருப்பினும் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் என்பது பெரிய அளவில் தங்கத்தின் விலை அதிகளவில் குறையாவிட்டாலும், அதிக ஏற்றம் காணவும் விடாது எனலாம். ஆக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் சுத்திகரிப்பு

தங்கம் சுத்திகரிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் தங்க சுத்திகரிப்பாளர்கள் கடுமையான தணிக்கை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், இது சட்ட விரோத வணிக நடவடிக்கையை எதிர்த்து போராடும் ஒரு முயற்சி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தங்கம் சுத்திகரிப்பில் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யாவிலும் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தங்கத்தின் உறபத்தியானது அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

தங்கத்தின் முக்கிய லெவல் உடைப்பு

தங்கத்தின் முக்கிய லெவல் உடைப்பு

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் இதே போல சற்று அழுத்தத்தில் காணப்பட்டாலும், தொடர்ந்து முக்கிய லெவல்களுக்கு மேலேயே இருந்து வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.50 டாலர்கள் குறைந்து, 1826.50 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்தது. ஆனால் தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.510 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 48,009 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 48,018 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 48,015 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 31 ரூபாய் குறைந்து, 64,850 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 64,881 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 64,877 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குரைந்தாலும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 4,527 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 36,216 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 4,939 ரூபாயாகவும், சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 39,512 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,390 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று மாற்றம் காணவில்லை. கிராமுக்கு, 69.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 691 ரூபாயாகவும், கிலோவுக்கு 69,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சரிவினைக் கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on November 9th 2021: Gold prices struggling amid stable bond yields

Gold price latest updates.. Gold prices on November 9th 2021: Gold prices struggling amid stable bond yields / தடுமாறும் தங்கம் விலை.. வாழ்வா, சாவா போராட்டத்தில் தங்கம்.
Story first published: Tuesday, November 9, 2021, 12:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X