எகிறிய தங்கம் விலை.. இன்று எவ்வளவு அதிகரித்திருக்கிறது தெரியுமா.. சாமானிய மக்கள் கவலை!

டெல்லி: தங்கம் விலையானது (gold) தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. இது கடந்த அமர்வில் 1 மாத உச்சத்தினை எட்டியது. அமெரிக்காவில் பணவீக்கம் குறித்தான தரவானது வெளியாகவுள்ள நிலையில், தங்கம் விலையானது அதிகரித்து வருகின்றது.

மீண்டும் பணவீக்கம் என்பது அதிகரிக்கலாமோ என்ற அச்சமே இருந்து வருகின்றது. இது மீண்டும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1700 கீழாகவே இருந்து வந்த நிலையில், தற்போது அந்த லெவலையும் உடைத்துள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் பத்திர சந்தையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்தது. அதோடு தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே சரிவில் காணப்பட்ட நிலையில், குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

வட்டி அதிகரிக்க தூண்டலாம்

வட்டி அதிகரிக்க தூண்டலாம்

அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறையீடானது வியாழக்கிழமையன்று வெளியாகவுள்ள நிலையில், இது மேற்கோண்டு ஃபெடரல் வங்கியினை வட்டி விகிதத்தினை மேலாக வைத்திருக்க தூண்டலாம். இது மேற்கோண்டு வட்டி விகிதத்தினையும் அதிகரிக்க தூண்டலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தங்கம் என்பது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது.

 மத்திய வங்கிகள் நடவடிக்கை

மத்திய வங்கிகள் நடவடிக்கை

அமெரிக்காவின் மத்திய வங்கி மட்டும் அல்ல, ஐரோப்பிய மத்திய வங்கியும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு பணவீக்கம் அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முற்படலாம். இந்திய வங்கியும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 5 டாலர்கள் குறைந்து, 1711 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையைம், அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று தடுமாறினாலும், மீண்டும் அதிகரிப்பதற்கே சற்று வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது தங்கத்தினை போல குறைந்தே, காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்றைய தொடக்க விலையும் கீழாக காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.64% குறைந்து, 21.367 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 147 ரூபாய் அதிகரித்து, 51,483 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்சம், அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதனால் மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் எனலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு, 258 ரூபாய் குறைந்து, 61,701 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்சம், அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதனால் மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் எனலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணபட்டாலும், ஆபரண தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 57 ரூபாய் அதிகரித்து, 4815 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 456 ரூபாய் அதிகரித்து, 38,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 63 ரூபாய் அதிகரித்து, 5253 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 504 ரூபாய் அதிகரித்து, 42,024 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 630 ரூபாய் அதிகரித்து, 52,530 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்றும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இது கிராமுக்கு 70 பைசா அதிகரித்து, 67.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 674 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து, 67,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.48,150

மும்பை - ரூ.47,360

டெல்லி - ரூ.47,460

பெங்களூர் - ரூ.47,410

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.48,150

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+