கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் சற்றே குறைந்து 1757.15 டாலர்களாக காணப்படுகிறது. இது தங்கத்தின் முக்கிய லெவலான 1760 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. இது இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. இது தேவை இருக்கும் பட்சத்தில் தங்கத்தை வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
அதெல்லாம் சரி, தங்கத்தின் தற்போதைய நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை நிலவரம் என்ன/ ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? முக்கிய லெவல்கள் என்னென்ன? நிபுணர்களின் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தொடர் ஏற்றத்தில் டாலர் மதிப்பு
தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது மூன்று வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சாதகமான வேலையின்மை தரவு
கடந்த வாரத்தில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட தரவுகளில் ஒன்று, அமெரிக்காவின் வேலையின்மை விகிதம். நிபுணர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் குறைந்துள்ள நிலையில், இது பொருளாதாரம் மீண்டு வருவதை சுட்டிக் காட்டுகின்றது. இது மேற்கொண்டு டாலருக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு புகலிடத்துக்கு ஆதரவு
இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், இதனால் விரைவில் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. மேலும் நவம்பர் மாதம் தொடங்கி படிப்படியாக அமெரிக்க அரசு பத்திரம் வாங்குவதையும் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
பங்குச்சந்தைகள் ஏற்றம்
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில் வரவிருக்கும் அமர்வுகளை பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் காண வழி வகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடு குறைக்க வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆசிய சந்தைகள் பலவும் தற்போது மீண்டு வர தொடங்கியுள்ள நிலையில், இந்திய சந்தையானது மீண்டும் உச்சம் காண தொடங்கியுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழி வகுக்கலாம்.
தேவை அதிகரிக்கலாம்
வரவிருக்கும் விழாக்கால பருவத்தையொட்டி இந்திய சந்தையில் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. இதற்கிடையில் சீனாவின் பொருளாதாரம் தற்போது சற்று மந்தமாக உள்ள நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு மேற்கொண்டு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீனாவிலும் முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.
பணவீக்கம் Vs தங்கம்
தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அழுத்தத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்ற நிலையும் இருந்து வருகிறது. இது தொடர்ந்து அதிகரித்துவரும் டாலரின் மதிப்பு, பத்திர சந்தை, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட பல காரணிகளும், பணவீக்கத்தினை அதிகரிக்க வழி வகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு பாதுகாப்பாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகால நோக்கில் வாங்கலாம்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆக இவை இரண்டுமே நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. தங்கம் விலை சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 2.55 டாலர்கள் குறைந்து, 1754.85 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
.
காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.695 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 141 ரூபாய் குறைந்து, 46,896 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,037 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 46,950 ரூபாயாகவும் தொடங்கியது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்க வில்லை. ஆக இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 130 ரூபாய் குறைந்து, 61,671 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,801 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,500 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சம் குறைந்த விலை என எதனையும் உடைக்காமல் காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4,419 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 35,352 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து , 4,821 ரூபாயாகவும், சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 38,568 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,210 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 10 பைசா குறைந்து, 65.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 658 ரூபாயாகவும், கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 65,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications