தங்கத்திற்கு தள்ளுபடி.. 2 மாதத்தில் முதல் முறையாக செம வாய்ப்பு.. இது சரியான நேரம் தான்..!

தங்கத்தை விரும்பாத பெண்கள் யார்? அவரவர் நிலைக்கு ஏற்ப 1 கிராமாவது தங்கம் வாங்கி விட வேண்டும் என்று நினைப்பதுண்டு. வரவிருக்கும் தீபாவளி சமயத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

ஏனெனில் பணிபுரியும் ஊழியர்கள் போனஸ் போன்ற சலுகைகள், நகை சீட்டு உள்ளிட்ட பலவற்றையும் தீபாவளி சமயத்தில் பெறுவர். இதனால் தங்கத்தின் தேவையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தங்கம் விலையானது தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் இந்த நிலையில், வியாபாரிகள் பற்பல சலுகைகளையும் அளிக்க தொடங்கியுள்ளனர்.

தள்ளுபடி விலையில் தங்கம்

தள்ளுபடி விலையில் தங்கம்

குறிப்பாக இரண்டு மாதத்தில் முதல் முறையாக தங்கத்திற்கு தள்ளுபடியை டீலர்கள் வழங்கி வருகின்றனர். இது குறித்து வெளியான ராய்ட்டர்ஸ் செய்தியில், உள்நாட்டில் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தள்ளுபடியானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது 2 டாலர்கள் வரையில் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் $4 பிரீமியம் விலை

கடந்த வாரம் $4 பிரீமியம் விலை

இதே கடந்த வாரத்தில் 4 டாலர் பிரீமிய விலையில் தங்கம் விலை இருந்தது. இதனுடன் தங்கத்தின் இறக்குமதி வரியாக 10.75% மற்றும் ஜிஎஸ்டி விகிதமானது 3% சேர்த்து விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தள்ளுபடியானது மேற்கொண்டு தங்கம் விலையினை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் இருந்து ஏற்றம்

குறைந்த விலையில் இருந்து ஏற்றம்

சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த செப்டம்பர் மாத குறைந்தபட்ச விலையானது 45,700 ரூபாயில் இருந்து பார்க்கும்போது, ஏற்றத்தில் தான் உள்ளது. இது இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

தொடர் ஏற்றத்தில் பத்திர சந்தை

தொடர் ஏற்றத்தில் பத்திர சந்தை

பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது மேற்கொண்டு டாலருக்கு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது, மேற்கொண்டு பத்திர வாங்குதலை ஊக்குவிக்குமோ என்ற அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தற்போது நாடு முழுவதும் வேகமாக தடுப்பூசியானது போடப்பட்டு வருகின்றது. இது அதிகளவிலான தங்க விலையேற்றத்தினை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபண்டமெண்டல் ரீதியாக டாலரின் மதிப்பானது பல சவாலான காரணிகளுக்கு மத்தியில் சற்று வலுவடைந்து காணப்படுகின்றது. இதுவும் தங்கம் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

பாதுகாப்பு புகலிடமான தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் நிலையில், இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 5.85 டாலர் அதிகரித்து, 1761.55 டாலராக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்கலாம் என்றாலும், கட்டாயம் ஸ்டாப் லாஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.08% அதிகரித்து, 22.680 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 47,161 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,051 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 47,099 ரூபாயாகவும் தொடங்கியது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்க வில்லை. ஆக இது மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 66 ரூபாய் அதிகரித்து, 61,810 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,744 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,736 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சம் குறைந்த விலை என எதனையும் உடைக்காமல் காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 4,430 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 35,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 4,832 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 38,656 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு, 65.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 658 ரூபாயாகவும், கிலோவுக்கு 65,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அப்படியே வாங்கினாலும் கட்டாயம் ஸ்டாப் லாஸ் என்பதை வைத்து வாங்கலாம். ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+