பலத்த ஏற்றத்திற்கு பிறகு இன்று சரிவில் தங்கம் விலை.. இது முதலீட்டாளார்களுக்கு ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கம் என்றாலே ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது, வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல் முதலீடுகளிலும் முக்கியத்துவம் கொண்டுள்ளதாக மாறியுள்ளது.

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்தை ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இது சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலான 1740 டாலர்களை உடைத்து, தற்போது 1750 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. ஆக தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்திருந்தாலும், மீண்டும் அதிகரிக்கும் என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

தொடர் சரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு..! தொடர் சரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!

சற்றே சரிவில் தங்கம் விலை

சற்றே சரிவில் தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது கடந்த அமர்வில் மிகப் பெரிய அளவில் ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யத் தொடங்கி இருக்கலாம் என்று நிலையில் சற்று குறைந்துள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

குறைந்த விலை வாங்க தூண்டலாம்

குறைந்த விலை வாங்க தூண்டலாம்

தங்கம் விலையானது அதன் ஏழு வார சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளது. இது மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற உணர்வையே காட்டுகிறது. மேலும் குறைந்த விலையிலான தங்கம், பலரையும் வாங்க தூண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 10,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது விலை அதிகரிப்பதற்கு இன்னொரு காரணம் எனலாம்.

பத்திர லாபம் சரிவு
 

பத்திர லாபம் சரிவு

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வந்தது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழி வகுத்தது. ஆனால் தற்போது பத்திர சந்தையானது சற்றே சரிவினை காண தொடங்கியதை, அடுத்து தங்கம் விலையில் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக குறைந்த தங்கம் விலையானது மேலும் முதலீட்டாளர்களை கவரும் விதமாக உள்ளதால், இதுவும் தங்கம் விலை ஏற்றத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

எவர் கிராண்டே குறித்த அச்சம்

எவர் கிராண்டே குறித்த அச்சம்

சர்வதேச அளவில் பல சாதகமான காரணிகள் இருந்தாலும் சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான எவர்கிராண்டே நிறுவனம், கடும் நிதி நெருக்கடியால் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் இந்த அளவுக்கு பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது, மற்ற நாடுகளின் நிலை என்ன என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைய காரணமாக அமைந்துள்ளது.

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் கொண்டு பத்திரம் வாங்குதலை அரசு, படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விரைவில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்க முற்படலாம் என்ற நிலை நிலவி வருகிறது. இதுவும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் இரண்டாவது காலாண்டு குறித்தான வளர்ச்சி வீதத்தினை நிபுணர்கள் சற்று சாதகமாக மாற்றியமைத்துள்ளனர்.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கம் விலை ஆனது தற்போது 1750 டாலர் என்ற நிலையில், இது அடுத்ததாக 1797 டாலர் என்ற நிலையை அடையலாம் என நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவு, தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தில் நேற்றைய உச்சமான 1764 டாலர்களை, உடைக்கும்போது இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதே முக்கிய சப்போர்ட் விகிதமாக 1747 டாலர் உள்ளது. இதனை மேற்கொண்டு உடைத்தால் 1738 டாலர்கள் வரை செல்லலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

வரவிருக்கும் விழாக்கால பருவத்தையொட்டி இந்திய சந்தையில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலைக்கு சாதகமாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. மேலும் சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தின் விலை குறைவாக உள்ள நிலையில் இதனை வாங்கி வைக்கலாம் என்ற நிலையும் நிலவி வருகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 5.20 டாலர்கள் குறைந்து, 1751.80 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.047 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 143 ரூபாய் குறைந்து, 46,180 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 46,323 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 46,295 ரூபாயாகவும் தொடங்கியது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்க வில்லை. ஆக இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 71 ரூபாய் குறைந்து, 59,562 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 59,617 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 59,600 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சம் குறைந்த விலை என எதனையும் உடைக்காமல் காணப்படுகின்றது. ஆக பொறுத்திருந்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 4,392 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 448 ரூபாய் அதிகரித்து, 35,136 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 61 ரூபாய் அதிகரித்து, 4,791 ரூபாயாகவும், சவரனுக்கு 488 ரூபாய் அதிகரித்து, 38,328 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 47,910 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 70 பைசா அதிகரித்து, 63.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 637 ரூபாயாகவும், கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து, 63,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on October 1st 2021: Gold price today down after big jump

Gold price latest updates.. Gold prices on October 1st 2021: Gold price today down after big jump
Story first published: Friday, October 1, 2021, 12:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X