தங்கத்தின் தேவையில் பெரிய மாற்றம் இருக்காது.. WHO சொன்ன நல்ல விஷயம்.. இனி விலை எப்படியிருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், தங்கத்தின் தேவையானது வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் குறிப்பாக வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது மீண்டு வரலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ஆனால் தங்கத்தின் தேவையானது நடப்பாண்டில் அவ்வளவு பெரிய அளவில் தேவை ஏற்றம் காண வாய்ப்பு இல்லை என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் தற்போது தான் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், மூன்றாவது கட்ட பரவல் இருக்கலாமோ என்ற பதற்றமும் சந்தையில் இருந்து வருகிறது. இது மேற்கொண்டு தங்கத்தின் தேவையை குறைக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இது சந்தேகம் தான்

இது சந்தேகம் தான்

மேலும் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தங்கத்தின் தேவையானது பலத்த சவால்களுக்கு மத்தியில், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுமா? என்பதே சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையானது தற்போது தான் மீளத் தொடங்கியுள்ளது.

மூன்றாம் கட்ட பரவல் குறித்த அச்சம்

மூன்றாம் கட்ட பரவல் குறித்த அச்சம்

மேலும் சந்தையில் நிலவி வரும் மற்றொரு அச்சம், எப்படி மூன்றாம் கட்ட அலை வந்தால் சமாளிப்பது. இதற்கிடையில் தான் அவசியம் தவிர, மற்றவர்கள் செலவு செய்வதை மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தங்கத்திற்கான தேவையானது பெரும் அளவு அதிகரிக்கலாம் என்பது சந்தேகத்திற்குரிய ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் பயன்பாடு

தங்கத்தின் பயன்பாடு

நாட்டில் தங்கத்தின் பயன்பாட்டில் 60% கிராமப்புற பகுதிகளில் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் காலம் தவறிய பருவமழை, தொடர்ச்சியான கனத்த மழை உள்ளிட்ட பல காரணங்களால் விவசாயத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் என்பது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக இதுவும் தங்கத்தின் தேவையை குறைக்க வழி வகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு சாதகமான காரணிகள்

தங்கத்திற்கு சாதகமான காரணிகள்

எனினும் நீண்டகால நோக்கில் தங்கத்தின் தேவையானது அதிகரிப்பதற்கான சில காரணிகளும் சந்தையில் உள்ளன. அதில் ஒன்று தற்போது வேலைவாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வேலை செய்யும் வயதினரை கொண்ட மக்கள் தொகையானது, தொடர்ந்து வலுவாக அதிகரித்து வருகின்றது. இது மக்கள் கையில் பொருளாதாரத்தினை விரிவாக்கம் செய்ய உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதகமான பணவீக்கம்

சாதகமான பணவீக்கம்

சந்தையில் தங்கத்திற்கான தேவையானது, குறிப்பாக வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்திற்கான தேவை என்பது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளான, அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இது தொடர்ந்து பத்திர சந்தை ஏற்றம் கண்டு வரும் நிலையில், சர்வதேச பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இதற்கிடையில் வட்டி விகிதமும் குறைவாக உள்ளது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

அமெரிக்காவின் தொழில்துறை உற்பத்தி குறித்தான குறியீடும், இதுதவிர வட்டி விகிதம் குறைவாகவே உள்ள நிலையில், இது இனி வரவிருக்கும் காலங்களில் அதிகரித்தால், இதில் தங்கம் விலையில் மாற்றம் இருக்கலாம் என்ற நிலையும் இருந்து வருகிறது. எப்படி இருப்பினும் நீண்ட கால நோக்கில் பணவீக்கம் என்பது உச்சத்தை தொடலாம். ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கத்தின் மதிப்பானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது.

பாதுகாப்பு புகலிடத்திற்கு சாதகம்

பாதுகாப்பு புகலிடத்திற்கு சாதகம்

சீனாவில் தற்போது நிலவிவரும் நிலக்கரி பற்றாக்குறையால் கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது. இதனால் உற்பத்தியானது பாதிப்படைந்துள்ள நிலையில், இது வரவிருக்கும் காலங்களிலும் மெதுவான வளர்ச்சியைக் காண வழி வகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு, சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 9.05 டாலர்கள் அதிகரித்து, 1779.55 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.968 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 111 ரூபாய் அதிகரித்து, 47,391 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,280 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 47,355 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக இது மீடியம் டெர்மில் பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 193 ரூபாய் அதிகரித்து, 64,643 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 64,450 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 64,420 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 4,474 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 35,792 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 4,881 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 39,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,810 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 90 பைசா அதிகரித்து, 68.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 687 ரூபாயாகவும், கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து, 68,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on October 20th, 2021: gold demand rebound in next year; its may reflect in gold price

Gold price latest updates.. Gold prices on October 20th, 2021: gold demand rebound in next year; its may reflect in gold price
Story first published: Wednesday, October 20, 2021, 15:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X