சாமனியர்கள் இனி கனவில் தான் நினைக்க முடியுமா.. கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கம் என்றாலே ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது, இன்று வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான முக்கிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

 

இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ளதையடுத்து, தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் விலையும் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. மீண்டும் வரும் தேவைக்கு மத்தியில், தங்கத்தின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை 17 நகரங்களில் 110ஐ தாண்டியது.. மக்கள் அவதி..! பெட்ரோல் விலை 17 நகரங்களில் 110ஐ தாண்டியது.. மக்கள் அவதி..!

சர்வதேச சந்தையில் இன்றைய தங்கம் விலை என்ன? வெள்ளியின் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? ஆபரணத் தங்கத்தின் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? முக்கிய காரணிகள் சந்தைக்கு சாதகமான பாதகமான காரணிகள் என்னென்ன? முக்கிய லெவல் என்ன? தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விழாக்காலப் பருவத்தினை முன்னிட்டு இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவில் மீண்டும் கொரோனாவில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில். இது மேற்கொண்டு தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது முதலீடு ரீதியாக தங்கத்தின் தேவையை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் பற்றிய அச்சம்

பணவீக்கம் பற்றிய அச்சம்

தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டு வரும் நிலையில், வட்டி மிகவும் குறைவாக உள்ளது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இதற்கிடையில் சீனாவின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில், பாதுகாப்புகள் இடமான தங்கத்திற்கு இது பாதுகாப்பாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கத்தினை ஊக்குவிக்கும் காரணி
 

பணவீக்கத்தினை ஊக்குவிக்கும் காரணி

தற்போது டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்தாலும், பல்வேறு முக்கிய காரணிகளும் தங்கத்திற்கு எதிராக உள்ளன. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. ஒருபுறம் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டு வந்தாலும், அது பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பரவி வரும் கொரோனா

மீண்டும் பரவி வரும் கொரோனா

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகிறது. இது மீண்டும் சர்வதேச அளவிலான இரண்டாவது பெரிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதை விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் எதிரொலி சர்வதேச அளவில் இருக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

டெக்னிக்கல் கணிப்பு

டெக்னிக்கல் கணிப்பு

தங்கம் விலை அவுன்ஸூக்கு 1800 டாலர்களை உடைத்தால், அது மேற்கொண்ட ஏற்றம் காணலாம் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வந்தது. இந்த நிலையில், தற்போது 1800 டாலர்களுக்கு அருகிலேயே வர்த்தகமாகி வருகிறது. டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது தினசரி, வார கேண்டில் என அனைத்திலும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

இப்படி தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கினால், அடுத்த முக்கிய லெவல் ஆன 1835 டாலர்களை தொடலாம் என்றும், அதனையும் உடைத்தால் 1880 டாலர்களை தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே சப்போர்ட் லெவலாக 1780 டாலர்களையும் கணித்துள்ளனர்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1799.20 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 24.510 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 178 ரூபாய் அதிகரித்து, 47,975 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,797 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 47,900 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக இது மீடியம் டெர்மில் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்யலாம். எனினும் நீண்டகால நோக்கில் இது வாங்க சரியான இடமே.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 434 ரூபாய் அதிகரித்து, 66,090 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 65,656 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 65,770 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 4,518 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 36,144 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 4,928 ரூபாயாகவும், சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 39,424 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 70.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 703 ரூபாயாகவும், கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 70,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. மீடியம் டெர்ம் & இன்ட்ராடேவிலும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் கண்டிப்பாக ஸ்டாப் லாஸ் என்பதை வைத்து வர்த்தகமாகலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on October 25th 2021: Gold prices trade nearly in $1800:it may surge again

Gold price latest updates.. Gold prices on October 25th 2021: Gold prices trade nearly in $1800:it may surge again
Story first published: Monday, October 25, 2021, 11:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X