தொடர் ஏற்றத்தில் தங்கம்.. எப்படி அதிக லாபம் பார்ப்பது.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் என்றாலே நம்மவர்களுக்கு அதன் மீது ஒரு அலாதி பிரியம். எப்போதுமே அதன் மீது ஒரு காதல், உணர்வுபூர்வமான ஒரு உலோகமாக உள்ளது. இப்படி மக்களின் வாழ்வுடன் பின்னி பிணைதுள்ள தங்கம், தற்போதைய காலக்கட்டங்களில் முதலீட்டிலும் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக உள்ளது.

பொதுவாக முன்பெல்லாம் தங்கத்தினை நாம் தங்க நகையாக, காயினாக, பார்ராக வாங்குவோம். ஆனால் இன்று தங்க பத்திரம், கோல்டி இடிஎஃப், எம்சிஎக்ஸ் தங்கம் என பல வகையிலும் வாங்கி வருகின்றோம். ஆனால் எப்படி அதிக லாபம் பார்ப்பது? எதில் முதலீடு செய்யலாம்?

 உலகின் மதிப்புமிக்க வாகன நிறுவனம்..  டிரில்லியனை தாண்டிய சந்தை மதிப்பு.. டெஸ்லா வேற லெவல்..! உலகின் மதிப்புமிக்க வாகன நிறுவனம்.. டிரில்லியனை தாண்டிய சந்தை மதிப்பு.. டெஸ்லா வேற லெவல்..!

வாங்கினாலும் விற்றாலும் லாபம்

வாங்கினாலும் விற்றாலும் லாபம்

எம்சிஎக்ஸ் தங்கத்தினை பொறுத்தவரையில் தங்கத்தினை வாங்கினாலும் லாபம் உண்டு. விற்றாலும் உண்டு. ஆக விலை குறையும்போது வாங்கி வைக்கலாம். உச்சத்தில் இருக்கும்போது விற்று வைக்கலாம். இது பங்கு சந்தையினைபோலவே அதிக ஏற்ற இறக்கம் உள்ளதால், இன்றளவிலும் இதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. அதிலும் பொதுவாக தங்கத்தினை பொறுத்தவரையில் தங்கத்தில் செல்லிங் ஆப்சன் என்பது கண்ணை கட்டிக் கொண்டு காட்டில் செல்வது போல் தான்.

கவனமாக இருக்க வேண்டும்

கவனமாக இருக்க வேண்டும்

ஆக செல்லிங் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு பொருளின் விலை குறைந்தால், அது அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். ஆனால் அதிகரித்த பின்னர் குறையுமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். குறிப்பாக தங்கத்தில் இது மிக யோசிக்க வேண்டிய விஷயம். ஏனெனில் பல நிபுணர்களும், ஆய்வாளார்களும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என கூறி வருகின்றனர். ஆக செல்லிங் ஆப்சன் என்பது மிக ரிஸ்கான ஒரு விஷயமே. அப்படியே தங்கம் விலையானது சரியலாம் என தெளிவாக தெரிந்தாலும், கட்டாயம் உங்களது செல்லிங் ஆர்டருக்கு ஸ்டாப் லாஸ் வைக்க வேண்டும்.

தொடர்ந்து அதிகரிக்கும் தேவை

தொடர்ந்து அதிகரிக்கும் தேவை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது ஏற்கனவே 48,000 ரூபாயினை தாண்டியுள்ள நிலையில், இனி எப்படியிருக்கும்? இது குறையவே குறையாதா?
இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ளதையடுத்து, தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் தான் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. மீண்டு வரும் தேவைக்கு மத்தியில், தங்கத்தின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் Vs தங்கம்

ரூபாய் Vs தங்கம்

கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து அவ்வப்போது ஏற்றம் கண்டாலும் தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகின்றது இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பும் சற்று வலுவிழந்து காணப்படுகிறது. ஆக இதுவும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

பத்திர சந்தை வீழ்ச்சி

பத்திர சந்தை வீழ்ச்சி

கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் வந்த நிலையில், தற்போது சற்று சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் சீனா, ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கத்தின் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையில், தற்போது பணவீக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகரித்து வரும் மூலதன பற்றாக்குறை, சப்ளை செயின் பாதிப்பு உள்ளிட்ட பல காரணிகளினால் விலைவாசி அதிகரிக்கலாம். இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு

பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு

சீனாவின் எவர் கிராண்டே நிறுவனம் கடன் பிரச்சினையில் தத்தளித்து வரும் நிலையில், அங்கு ரியல் எஸ்டேட் முதலீடுகள் குறைந்துள்ளன. இதற்கிடையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சீனாவின் பொருளாதாரம் மந்த நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக தற்போது கொரோனாவின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பொருளாதாரத்தில் மேலும் மந்த நிலையை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், இது மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் பெஸ்ட் ஆப்சன்

இது தான் பெஸ்ட் ஆப்சன்

மேற்கண்டவாறு தங்கத்தில் செல்லிங் ஆப்ஷனில் லாபம் பார்க்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில் செல்லிங் ஆப்ஷன் பாதுகாப்பற்ற ஒரு முதலீடாகவே பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் விலையானது அதிகரிக்கும் என்பதால், விலை குறையும்போது வாங்கி வைப்பது மிக சிறந்த முதலீட்டு ஆப்ஷன் இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1807 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது சற்று குறைந்து அவுன்ஸூக்கு, 24.543 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது தற்போது சற்று குறைந்து இருந்தாலும், மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமே.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 63 ரூபாய் அதிகரித்து, 48,263 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று குறைவாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 66,154 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 66,139 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 66,235 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 4,538 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 36,304 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 4,951 ரூபாயாகவும், சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 39,608 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,510 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 10 பைசா குறைந்து, 70.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 702 ரூபாயாகவும், கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 70,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on October 26th 2021: Gold prices trade above Rs.48,000, it may up further

Gold price latest updates.. Gold prices on October 26th 2021: Gold prices trade above Rs.48,000, it may up further
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X