தங்கத்தின் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு சற்று சரிவினை காணலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.
தற்போது விழாக்கால பருவத்தில் விலை குறைந்து இருப்பது, ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இது குறித்து நிபுணர்கள் தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இது profit-booking செய்யும் விதமாக சரிவினை கண்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
என்னென்ன பார்க்கபோகிறோம்?
இன்று சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்னென்ன? கவனிக்க வேண்டிய முக்கிய சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? அடுத்த முக்கிய லெவல் என்ன? நிபுணர்களின் கணிப்புகள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
புராபிட் புக்கிங் செய்யலாம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது சற்று குறைந்தாலும், தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பும் வலுவடைந்துள்ளது. இது தங்கம் விலை சரிவினைக் காண வழி வகுத்துள்ளது. இந்த நிலையில் இருக்கும் லாபத்தினை புக் செய்யும் விதமாக வர்த்தகர்கள் profit-booking செய்து வருகின்றனர்.
தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் பணவீக்கம்
சந்தையில் பல்வேறு விதமான காரணிகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் நிலையில், நீண்ட கால நோக்கில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டாலரின் மதிப்பு வலுவடைதல், பத்திர சந்தை ஏற்றம், பங்குசந்தைகள் ஏற்றம் உள்ளிட்ட பல காரணிகளும் எதிராக அமைந்துள்ள நிலையில், தங்கத்தில் முதலீடு குறைய வழி வகுத்துள்ளது. எனினும் பணவீக்கம் என்பது தங்கத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளது.
கொரோனா அச்சம்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் தற்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு மீண்டும் சீனாவின் பல முக்கிய நகரங்களிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது விநியோக சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சர்வதேச அளவிலான பொருளாதாரத்தை மேற்கொண்டு தாக்கலாம் என்ற நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை தரும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலையை ஊக்குவிக்க முக்கிய காரணியாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விழாக்கால தேவை
தங்கத்தின் தேவையானது கடந்த சில தினங்களாகவே விழாக்கால பருவம் ஆரம்பித்துள்ளதையடுத்து, தங்கத்திற்கான தேவை அளவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் முதலீட்டு ரீதியாக சீனாவின் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில், சீனாவும் தங்கத்தில் முதலீட்டினை அதிகரிக்கலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியாகவும் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
டெக்னிக்கல் பேட்டர்ன்
தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. இது அவுன்ஸூக்கு 1783 டாலர்களை உடைத்தால் மேற்கொண்டு குறையலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 6.35 டாலர்கள் குறைந்து, 1787.05 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்டுள்ள நிலையில், இன்றும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 24.050 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 108 ரூபாய் குறைந்து, 47,705 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,813 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 47,761 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக இது மீடியம் டெர்மில் பொறுத்திருந்து வாங்கலாம்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 221 ரூபாய் குறைந்து, 64,792 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 64,989 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 65,035 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது 8 நாட்களுக்கு பிறகு இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 4,508 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 36,064 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து, 4,918 ரூபாயாகவும், சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 39,344 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,180 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையும் இன்று குறைந்து காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 69.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 692 ரூபாயாகவும், கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 69,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!



Click it and Unblock the Notifications