அட இது ரொம்ப ஹேப்பி நியூஸ்.. இன்றும் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலத்த ஏற்றத்திற்கு பிறகு இன்றோடு இரண்டாவது நாளாக மீண்டும் தங்கம் விலையானது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இது இன்னும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்தியாவில் தங்கம் என்றாலே ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகத் பார்க்கப்படுகிறது, வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல் முதலீடுகளிலும் முக்கியத்துவம் கொண்டுள்ளதாக ஒன்றாக மாறியுள்ளது. ஆக தங்கம் விலை சரிவானது மேற்கொண்டு வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்திருந்தாலும், மீண்டும் அதிகரிக்கும் என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. எனினும் இனி குறைந்தால் எவ்வளவு குறையும்? எப்போது வாங்கலாம், நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

 தங்கத்தை வாங்கி குவித்த 'இந்திய' மக்கள்.. தங்கம் விலை சரிவுக்கு கோடான கோடி நன்றி..! தங்கத்தை வாங்கி குவித்த 'இந்திய' மக்கள்.. தங்கம் விலை சரிவுக்கு கோடான கோடி நன்றி..!

முக்கிய தரவுகள்

முக்கிய தரவுகள்

இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு குறித்தான தரவானது, இந்த வாரத்தில் வெளியாக உள்ளது. இது குறித்த தரவுகள் டாலரின் மதிப்பில் முக்கிய பங்காற்றலாம் என்ற நிலையில், முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனையடுத்து அமெரிக்காவின் பங்கு சந்தைகள் பெரிய அளவில் மாற்றம் காணாவிட்டாலும், தொடர்ந்து பத்திரம் சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்தில் காணப்படுகின்றது. இந்த நிலையில் தங்கத்தின் மதிப்பு சற்றே குறைய ஆரம்பித்துள்ளது.

டாலர் மதிப்பு அதிகரிப்பு

டாலர் மதிப்பு அதிகரிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது பாதுகாக்க புகலிடமான தங்கத்தின் விலையில் சரிவினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் தங்கத்தின் விலையானது சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. ஆக இது தங்கத்தினை வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை

இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. குறைந்த தங்கம் விலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள் வாங்கிக் கொண்டுள்ளனர். வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் நிச்சயம் தேவையை அதிகரிக்கலாம் என்ற நிலையில், தேவையை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை வழங்க தூண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இது பல சர்வதேச நாடுகளையும் விலை அதிகம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இது பணவீக்கத்தை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு எதிரான தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை

பத்திர சந்தை

தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது அமெரிக்க டாலருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் தான் இன்று 2-வது நாளாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவை கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சரிவை கண்டு வருகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகால நோக்கில் வாங்கலாம்

நீண்டகால நோக்கில் வாங்கலாம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் இதனை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இரண்டுமே, நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. தங்கம் விலை சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. இதற்கிடையில் நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க பரிந்துரை செய்கின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 7.35 டாலர்கள் குறைந்து, 1753.55 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.72% குறைந்து, 22.445 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 178 ரூபாய் குறைந்து, 46,579 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 46,757 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 46,674 ரூபாயாகவும் தொடங்கியது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்க வில்லை. ஆக இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 396 ரூபாய் குறைந்து, 60,590 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 60,986 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 60,726 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சம் குறைந்த விலை என எதனையும் உடைக்காமல் காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து, 4,392 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து , 35,136 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து , 4,791 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 38,328 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 47,910 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 64.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 649 ரூபாயாகவும், கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 64,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on October 6th 2021: Gold price likely to remain volatile, traders can take long term positions

Gold price latest updates.. Gold prices on October 6th 2021: Gold price likely to remain volatile, traders can take long term positions
Story first published: Wednesday, October 6, 2021, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X