தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. காலை அமர்வில் ஏற்றம் கண்டாலும், மாலை அமர்வில் சற்று சரிவினைக் கண்டு வருகின்றது.
அமெரிக்காவில் பண்ணையல்லாத பே ரோல் குறித்தான தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், அது குறித்து முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.
இது தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் அமெரிக்க டாலரின் மதிப்பானது 1 வருடத்தில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது.
டாலர் Vs தங்கம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் சர்வதேச சந்தையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. மேலும் இன்று வெளியாகவிருக்கும் பே ரோல் குறித்தான தரவும் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பே ரோல் தரவு
இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் பே ரோல் குறித்தான தரவு, செப்டம்பர் மாதத்தில் 5,00,000 லட்சம் வேலைகளாக அதிகரிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இது இவ்வாறு அதிகரிக்கும்போது அமெரிக்க டாலருக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இது தங்கம் விலையில் மேலும் அழுத்ததினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புராபிட் புக்கிங் செய்யலாம்
இதற்கிடையில் இன்று சந்தையின் இறுதி வர்த்தக நாள் என்பதால், சந்தையில் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். இதனால் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திரம் வாங்குதல் குறையலாம்
அமெரிக்காவின் பத்திர வாங்குதல் நடவடிக்கையானது நவம்பர் மாதத்தில் இருந்து, படிபடியாக குறைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வட்டி விகிதத்திலும் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பானது மேற்கொண்டு ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திர சந்தையில் லாபம்
வட்டி விகிதமானது அதிகரிக்க தொடங்கும்போது, பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்றும், இதனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தின் மதிப்பும் குறைய வாய்ப்பிருக்கின்றது. எப்படியிருப்பினும தொடர்ந்து அதிகரிக்கும் டாலரின் மதிப்பு, பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
தேவை அதிகரிக்கலாம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
பணவீக்கம் பற்றிய அச்சம்
தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இது பல சர்வதேச நாடுகளையும் விலை அதிகம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இது பணவீக்கத்தை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு எதிரான தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.20 டாலர் குறைந்து, 1758.15 டாலராக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.66% குறைந்து, 22.510 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 103 ரூபாய் குறைந்து, 46,930 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 46,827 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 46,861 ரூபாயாகவும் தொடங்கியது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்க வில்லை. ஆக இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்கலாம்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 61,058 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,258 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 60,991 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சம் குறைந்த விலை என எதனையும் உடைக்காமல் காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 4,413 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 35,304 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 4,814 ரூபாயாகவும், சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 38,512 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,140 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு, 65.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 652 ரூபாயாகவும், கிலோவுக்கு 65,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications