தங்கம் விலை வீழ்ச்சியா.. இன்னும் குறையுமா.. என்ன காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது நடப்பு மாத தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள் வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று 5% சரிவினைக் கண்டது.

இதனையடுத்து நேற்று சற்று ஏற்றம் கண்ட நிலையில், இன்றும் மீண்டும் சற்று சரிவினை கண்டுள்ளது.

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால, நேற்றைய முடிவு விலையினை விட, இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது உண்மையில் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?
 

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

அதெல்லாம் சரி முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை போல கொரோனாவுக்கான தடுப்பு மருந்தும் வந்தாயிற்று. இது அமெரிக்காவில் டிசம்பர் மாதம் முதல் செயலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவினையும் கண்டு வருகின்றது. இது இப்படியே நீடிக்குமா? இனி எப்படி இருக்கும். நிபுணர்களின் கணிப்பு என்ன? தற்போது வாங்கலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

முக்கிய காரணம் இதுவல்ல

முக்கிய காரணம் இதுவல்ல

கடந்த ஒரு வார காலமாகவே பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் தங்கம் விலையானது, பிப்சர் நிறுவனத்தின் அறிவிப்புக்கு பின்னர், பலத்த சரிவினைக் கண்டது. தடுப்பு மருந்தின் தாக்கம் பெரும்பாலும் தங்கத்தின் விலையில் பிரதிபலித்தாலும், இது தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணமாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலர் Vs ஊக்கத் தொகை

டாலர் Vs ஊக்கத் தொகை

ஏனெனில் தங்கத்தின் விலையில் முக்கிய பிரதிபலிப்பாக இருப்பது டாலரின் மதிப்பு தான். இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களின் முக்கிய எதிர்பார்ப்பே அமெரிக்கா ஊக்கத் தொகை குறித்தான எதிர்ப்பார்ப்பு தான். ஆக புதிய அதிபரின் ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்புகள் நோக்கி தான் முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். ஏனெனில் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் என்னவாகும். இதனால் டாலரின் மதிப்பு என்னவாகும்? என்பதே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

நிபுணர்களின் கணிப்பு என்ன?
 

நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கத்தினை நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் 10 கிராம் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதம் 50,000 ரூபாய் எனவும், ஆக இந்த இடத்தின் அருகில் வரும்போது வாங்கி வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் புராபிட் புக்கிங் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையலாம். ஆனால் நீண்டகால நோக்கிற்கான எந்த காரணிகளும் மாறவில்லை.

டாலரின் மதிப்பு தங்கத்திற்கு சப்போர்ட் செய்யும்?

டாலரின் மதிப்பு தங்கத்திற்கு சப்போர்ட் செய்யும்?

அமெரிக்க டாலரின் மதிப்பானது ஊக்கத் தொகை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாலரின் மதிப்பு சற்று அழுத்தத்திலேயே காணப்படுகிறது. இது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். அதோடு வளர்ந்து வரும் நாடுகளில் வரவிருக்கும் மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கலாம். தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆப்சனாக பார்க்கப்படுவதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று பிரித்வி பின்மார்ட் நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.

எதிர்பார்ப்பு என்ன?

எதிர்பார்ப்பு என்ன?

தங்கம் விலையின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் 50,330 - 50,000 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 50,800 - 51,000 ரூபாயாகும். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் - 62,500 - 61,800, இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 63,660 - 64,400 ரூபாயாகும்.

மேற்கண்ட பல காரணங்களினால் தங்கம் விலையின் சரிவானது, வாங்குவதற்கான முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது., இது சுமார் 50,000 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என்றும், வெள்ளியினை 61,800 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் எனவும் பிரித்வி பின்மார்ட் நிறுவனம் கணித்துள்ளது.

இன்றைய விலை சர்வதேச தங்கம் நிலவரம்

இன்றைய விலை சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் இன்று தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 3.70 டாலர்கள் அதிகரித்து, 1880.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்றைய முடிவில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் 1876.40 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1875.50 டாலர்களாக தொடங்கியுள்ளது.

இன்றைய சர்வதேச வெள்ளி நிலவரம்

இன்றைய சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாததையடுத்து, வெள்ளியின் விலை சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது 0.027 டாலர்கள் குறைந்து, 24.435 டாலர்களாக காணப்படுகிறது. நேற்று வெள்ளியின் விலையானது 24.462 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 24.238 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது. இது இன்று சற்று விலை குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 71 ரூபாய் குறைந்து, 50,430 ரூபாயாக காணப்படுகிறது. நேற்று தங்கம் விலையானது 50,501 ருபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,441 ரூபாயாகவே தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை இன்னும் சரிவினைக் காணலாம் போல காணப்படுகிறது. ஆக நிபுணர்கள் கூறுவதனை போல, முக்கிய சப்போர்ட் விகிதமான 50,000 ரூபாய்க்கு அருகில் வரும் போது வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையும், இந்திய கமாடிட்டி சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 322 ரூபாய் குறைந்து, 62,722 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் 63,044 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 63,000 ரூபாயாக தொடங்கியுள்ளது. ஆக இதுவும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது பலத்த சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்றும் சற்று சரிந்துள்ளது. நேற்று சவரனுக்கு 1,136 ரூபாய் குறைந்திருந்தது. இன்றும் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4,769 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 38,152 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5,202 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 52,020 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் நேற்று 10 கிராமுக்கு 1250 ரூபாய் குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரண வெள்ளி நிலவரம்

சென்னையில் ஆபரண வெள்ளி நிலவரம்

நேற்று பலத்த சரிவினைக் கண்ட ஆபரண வெள்ளியின் விலையானது, இன்று கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராம் 67.40 ரூபாயாகவும், இதே 10 கிராம் வெள்ளியின் விலையானது 674 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது விழாக்கால பருவத்தில் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. நிபுணர்களும் 10 கிராம் தங்கம் விலையானது 50,000 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என்று கூறுவதால், கொஞ்சம் பொறுத்திருந்து, விலை குறையும் பட்சத்தில் வாங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம். ஆபரண தங்கத்தை பொறுத்த வரையில் இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices open lower on today

Gold and silver prices little down today, its may best place for buying.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X