தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது வலுவடைந்து வரும் நிலையில், தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது.
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த மானிட்டரி கொள்கைகள் கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், மீடியம் டெர்மில் இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்திற்கு ஆதரவு
அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை கட்டாயம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், தங்கம் விலையானது தொடன்ர்து சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் அனைத்தும் சரிவினைக் கண்டு வருகின்றன. இது மேற்கொண்டு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 தசாப்தங்களில் இல்லாத அளவு ஏற்றம்
அமெரிக்க பத்திர சந்தையும் இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே பங்கு சந்தைகளிலும் பெரும் ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைந்தாலும், மீண்டு வர இது வழிவகுக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
சரிவில் தங்கம் & வெள்ளி விலை
தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பத்திர சந்தை, டாலரின் மதிப்பானது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.80 டாலர்கள் குறைந்து, 1828 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலையும் 0.34% குறைந்து, 21.183 டாலராகவும் வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கம் விலையும் சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 88 ரூபாய் குறைந்து, 4,75 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 38,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று சரிவில் காணப்படுகின்றது. இது கிராமுக்கு 95 ரூபாய் குறைந்து, 5188 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 41,504 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் இன்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.30 பைசா குறைந்து, 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1300 ரூபாய் குறைந்து, 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications