1 மாத சரிவில் இருந்து மீண்டு வரும் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையானது 1 மாத சரிவினைக் கண்டுள்ள நிலையில், குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது புராபிட் புக்கிங் காரணமாக, தங்கம் விலையானது 1 மாத சரிவில் இருந்து மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது நடப்பு வாரத்தில் ப்யூச்சர் சந்தையில் 1.27% அதிகரித்து காணப்பட்டது. எம்சிஎக்ஸ் சந்தையில், 10 கிராமுக்கு 50,880 ரூபாயினை எட்டியது. காமெக்ஸ் சந்தையில் அவுன்ஸூக்கு 1680 டாலர் என்ற லெவலையும் எட்டியது.

டாலரின் மதிப்பு சரிவு

டாலரின் மதிப்பு சரிவு

சந்தை நிபுணர்களின் எதிர்பார்ப்பின் படி, தங்கம் விலையானது டாலரின் மதிப்பு 113 என்ற லெவலில் இருந்து 111 என்ற லெவலை எட்டியுள்ள நிலையில் சரிவினைக் கண்டுள்ளது. இது ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கடுமையான நடவடிக்கையால் குறைந்தது. இது ஃபெடரல் வங்கியின் முடிவில் தளர்வு இருக்கலாம் என்ற நம்பிக்கையை குறைத்தது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

சீனா ஜீரோ கோவிட் பாலிசி

சீனா ஜீரோ கோவிட் பாலிசி

சீனாவிலும் தற்போது ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக, பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்பட்டது. இது முதலீட்டு ரீதியாக தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது தற்போது 1620 - 1685 என்ற லெவலில் காணப்படுகின்றது. இதனை உடைத்தால் அவுன்ஸூக்கு 1710 என்ற லெவலை எட்டலாம். எம்சிஎக்ஸில் 49,800 ரூபாய் முதல் 50,900 ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லெவலை உடைத்தால் 51,300 - 51,800 ரூபாய் என்ற லெவலை எட்டலாம்.

டாலர் மதிப்பு அதிகரிக்கலாம்

டாலர் மதிப்பு அதிகரிக்கலாம்

பல நிபுணர்கள் தற்போதைய நிலையில் தங்கத்தினை வாங்கி வைக்க பரிந்துரை செய்து வருகின்றனர். இதில் ரிலீகேர் புரோக்கிங் நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் வங்கியானது 4வது முறையாக வட்டி பெரியளவில் அதிகரித்தது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தலாம். எனினும் டாலரின் மதிப்பினை 113 என்ற லெவலுக்கு திரும்ப ஊக்குவிக்கலாம் என தெரிவித்துள்ளது.

பேங்க் ஆப் இங்கிலாந்து

பேங்க் ஆப் இங்கிலாந்து

இதே பேங்க் ஆப் இங்கிலாந்தும் 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை வரும் மாதங்களில் மெதுவாக்கலாம். அதேசமயம் அமெரிக்காவின் வேலை சந்தையானது மீண்டும் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. எனினும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. ஆக இது போன்ற பல காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 53 ரூபாய் அதிகரித்து, 4770 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்து, 38,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 58 ரூபாய் அதிகரித்து, 5204 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 464 ரூபாய் அதிகரித்து, 41,632 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 580 ரூபாய் அதிகரித்து, 52,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை அதிகரித்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 1.90 ரூபாய் அதிகரித்து, 66.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1900 ரூபாய் அதிகரித்து. 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,700

மும்பை - ரூ.47,000

டெல்லி - ரூ.47,150

பெங்களூர் - ரூ.47,050

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,700

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+