தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. ஏனெனில் சர்வதேச சந்தையில் சற்று ஏற்றத்திலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் சற்று சரிவிலும் காணப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தொடர்ந்து தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்தது. இது குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.
தங்கம் விலையானது சற்று ஏற்றத்தினைக் கண்டாலும், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் அது பெரியளவிலான ஏற்றம் இல்லை. அதோடு அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இது எந்தளவுக்கு இருக்கும் என்பதும் தெரியவில்லை. எப்படி இருப்பினும் குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டும் என என்பதால், இந்த ஏற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?
இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் வெள்ளியின் விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்ன? நீண்டகால நோக்கில் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? குறிப்பாக இன்று எப்படி இருக்கும்? என பலவற்றையும் தற்போது பார்க்கலாம்.

Comex தங்கம் விலை
சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 6.15 டாலர்கள் அதிகரித்து, 1704.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு இன்று தொடக்கத்தில் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

Comex வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும், கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 1.57% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.393 டாலர்கள் அதிகரித்து, 25.675 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.

MCX தங்கம் விலை
இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 44 ரூபாய் குறைந்து 44,639 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இந்திய சந்தையில் தங்கத்தின் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள், ஸ்டாப் லாஸ் போடுவது அவசியம். இதே நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்க நல்ல இடமாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு ( மே காண்டிராக்ட்) 847 ரூபாய் அதிகரித்து, 66,450 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் அப் ஆகி சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளியின் விலை சற்று ஏற்றன் காணும் விதமாகவே காணப்படுகிறது.

குறைந்த தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது, தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாகவே சரிவினைக் கண்டு வருகிறது. இந்த வருட தொடக்கத்தில் இருந்து 10 கிராமுக்கு 5,000 ரூபாயும், இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 56,200 ரூபாயில் இருந்து, சுமார் 11,500 ரூபாய் சரிவிலும் காணப்படுகிறது. ஆக குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிறந்த ஹெட்ஜிங்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் 10 வருட பத்திர லாபம், தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ச்சியாக வலுவடைந்து வருகிறது. இதனை ஊக்கப்படுத்தும் விதமாக 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகைக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பே ரோல் பற்றிய அறிவிப்பும் சாதகமாக வந்துள்ளது, பொருளாதாரம் வளர்ந்து வருவதையே சுட்டிக் காட்டுகிறது. இது தங்கத்திற்கு எதிரானதாக பார்க்கப்பட்டாலும், பணவீக்கம் அதிகரிக்குமே என்ற பயமும் இருந்து வருகிறது. ஆக இது சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும், தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை சரியலாம்
தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், சரியும் விதமாக காணப்படுகிறது. இது டாலரில் அவுன்ஸூக்கு 1760 டாலருக்கு கீழ் காணப்படும் நிலையில், சற்று சரியவே வாய்ப்புகள் அதிகம். இதே முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 43,450 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை ஏற்றம் கண்டால் 45,200 ரூபாயினையும் தொடலாம்.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்
தங்கத்தின் விலையானது 1760 டாலர்களுக்கு கீழேயே இருப்பதால் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல்கள் இந்திய சந்தையில் 44,500 - 44,250 ரூபாயாகும். இதே சந்தையானது ஏற்றத்திற்கு திரும்பினால் 44,730 - 44,900 ரூபாய் என்பது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகும். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் 65,100 - 64,300 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 66,400 - 67,230 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரிக்கும் விதமாக காணப்பட்டாலும், காரணிகள் பலவும் தங்கத்திற்கு எதிராக காணப்படுகிறது. அப்படியே மீடியம் டெர்மில் தங்கத்தினை வாங்கினாலும் கண்டிப்பாக ஸ்டாப் லாஸ் என்பதை போட வேண்டும். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வெள்ளியிலும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.