தங்கம் விலை நான்காவது நாளாக தொடர் ஏற்றம்.. இனி குறையவே குறையாதா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. மாறாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது தொடந்து அதிகரித்து வருகின்றது.

 

முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி..! முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி..!

குறிப்பாக தங்கம் விலையானது இன்றோடு நான்காவது நாளாக தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்ட நிலையில், வாரத்தின் பிற்பாதியில் இருந்து உச்சம் தொட ஆரம்பித்தது.

கடந்த மாத தொடக்கத்தில் ஒரு வருட சரிவு விலையானது கிட்டதட்ட 44,000 ரூபாயினை தொட்ட நிலையில், அதனையே சப்போர்ட்டாக எடுத்துக் கொண்டு, தங்கம் விலையானது அவ்வப்போது சரவினைக் கண்டாலும், மொத்தத்தில் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. அதெல்லாம் சரி இன்றைய விலை நிலவரம் என்ன? இன்று விலை இனி எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? அடுத்த என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

இது வாங்க சரியான இடம்

இது வாங்க சரியான இடம்

தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சமான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும்போது, சுமார் 8,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் வாரத்தின் ஐந்தாவது வர்த்தக நாளான இன்று, தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 7.45 டாலர் அதிகரித்து, 1838.75 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. வார கேண்டில் பேட்டர்னிலும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை
 

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 1.62% அதிகரித்து, 27.918 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் காணப்படுகிறது. அதோடு முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுளது. ஆக இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 268 ரூபாய் அதிகரித்து, 48,019 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்று இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 1121 ரூபாய் அதிகரித்து, 72,550 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் இன்று சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று இதுவரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றம் கணவில்லை. இன்று கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 4,505 ரூபாயாகவும், சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து, 36,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 4,915 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து, 39,320 ரூபாயாகவும் காணப்படுகிறது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது.

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த சில அமர்வுகளாக பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படும் நிலையில், இன்றும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 76.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 76,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் நல்ல ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை.

தங்கம் விலை

தங்கம் விலை

அமெரிக்க பத்திர லாபம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு, அமெரிக்க வேலை குறித்த டேட்டா என பலவும் சற்று பலவீனமாக காணப்படும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதற்கிடையில் தான் இன்று தங்கம் விலையானது மூன்று மாத உச்சத்தில் காணப்படுகிறது.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

தங்கத்தின் அடுத்த முக்கிய லெவல் 1830 டாலர்களாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போது தங்கம் விலையானது 1838 டாலர்களுக்கு அருகில் உள்ளது. ஆக இந்த முக்கிய லெவலை உடைக்கும்பட்சத்தில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் சப்போர்ட் லெவல் 47,550 - 47,400 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,980 - 48,220 ரூபாயாகும்.

வெள்ளியின் சப்போர்ட் லெவல் 70,900 - 70,200 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 72,100 - 72,800 ரூபாயாகும்.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு


அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பங்கு சந்தைகளில் முதலீடுகளை குறைத்து, தங்கத்தில் முதலீடுகளை செய்ய தொடங்கியுள்ளனர். ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தொடர்ந்து வட்டி விகிதமும் குறைவாக உள்ள நிலையில், தங்கம் சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கத்தினை பொறுத்த வரையில் மீடியம் டெர்மிலேயே சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்ட கால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. வைக்கலாம். நிபுணர்கள் சொல்வதனை போல 1850 டாலர்களை உடைத்தால், இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices remain trade high in fourth day

Gold price update.. Gold prices remain trade high in fourth day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X