மும்பை: தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பணவீக்கமும் குறித்தான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
ஆக வாரத்தின் தொடக்க நாளான இன்றே தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படுகின்றது.
இது வரவிருக்கும் பணவீக்க தரவின் மத்தியில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய லெவல்
தங்கம் விலையானது விரைவில் அவுன்ஸூக்கு 1855 டாலரை எட்டலாம் என்றும், இதே வெள்ளி விலையானது 21.80 டாலர்களையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 1864 - 1855 டாலரகளாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 1888 - 1900 டாலர்களாகவும் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் சப்போர்ட் விலையானது 21.80 - 21.55 டாலராகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆனது 22.30 - 22.70 டாலராகவும் கணித்துள்ளனர்.
தங்கத்தில் முதலீடுகள் சரிவு
அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது இந்த வாரம் வெளியாகவுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. சமீபத்திய மாதங்களாகவே பணவீக்கமான மென்மையாகத் தொடங்கியுள்ள நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.65 டாலர்கள் குறைந்து, 1870.45 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.89% குறைந்து, 21.878 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 17 ரூபாய் குறைந்து, 56,724 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 296 ரூபாய் குறைந்து, 66,368 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5335 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 42,680 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5820 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 58,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 70 பைசா குறைந்து, 72 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 72,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications