தடுமாறும் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு வாங்க இது நல்ல வாய்ப்பு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. அதோடு பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றது.

எனினும் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலையானது 11,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது சாமனியர்களுக்கு தங்கத்தினை வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் இந்திய மக்களின் பாரம்பரிய சின்னமாகவும், அந்தஸ்த்தின் அடையாளமாகவும் இருக்கும் நிலையில், குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டாலும், பணவீக்கமும் தங்கத்திற்கு எதிராக உள்ளது. இதனால் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை எப்படி இருக்கும்? இன்று எப்படி இருக்கும்? என பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 3.80 டாலர்கள் அதிகரித்து, 1733.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் 1738 டாலர்கள் என்பது முக்கிய விகிதமாக கருதப்படுகிறது. இதனை உடைத்துக் காட்டினால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
 

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது மாற்றமின்றி 26.288 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 51 ரூபாய் அதிகரித்து, 44,951 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. தங்கம் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 59 ரூபாய் குறைந்து, 67,620 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது.

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

சர்வதேச காரணிகள் பலவும் பங்கு சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன. இதனால் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. அதோடு தங்க முதலீட்டாளர்களும் இந்த வாரம் வரவிருக்கும், ஃபெடரல் கூட்டத்தினை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இதனால் டவ் ஜோன்ஸ் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக ஆசிய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. விலை உயர்ந்த ஆபரணங்களின் விலையானது சற்று தடுமாற்றத்தில் உள்ளது.

தங்கம் விலை போக்கு

தங்கம் விலை போக்கு

நிபுணர்கள் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 1700 - 1735 டாலர்களுக்குள்ளேயே வர்த்தகமாகலாம். இதில் ஏதேனும் ஒரு பக்கம் உடைத்து சென்றால் தான், சந்தையின் போக்கினை கணிக்க முடியும். அப்படி உடைத்து செல்லும் போது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 1775 டாலர்களாகும். இதே முக்கிய சப்போர்ட் லெவல் 1660 டாலர்களாகும்.

குறையும் பத்திர லாபம்

குறையும் பத்திர லாபம்

மறுபுறம் சமீப வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த அமெரிக்காவின் பத்திர லாபமும், சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் 1700 டாலர்களாகும். அதோடு தங்கத்தின் முதலீட்டு தேவையும் குறைந்து வருகின்றது. இதனால் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

பணவீக்கம் பற்றிய அச்சம்

பணவீக்கம் பற்றிய அச்சம்

அமெரிக்காவின் ஊக்கத்தொகைகள் பற்றிய அறிவிப்புகள் இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், இது அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. எனினும் இந்த வாரம் நடக்கவுள்ள ஃபெடரல் வங்கி கூட்டத்தில் பாலிசிகளில் முக்கிய மாற்றங்கள் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றோடு இந்த வாரத்தில் பேங்க் ஆப் இங்கிலாந்து, பேங்க் ஆப் ஜப்பானும் தங்களது விகிதத்தினை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட பரவல்

இரண்டாம் கட்ட பரவல்

தற்போது உலகின் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் இரண்டாம் கட்ட பரவல் என்பது, எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தவுள்ளதோ என்ற அச்சத்தினையும் எழுப்பியுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. கேண்டில் பேட்டர்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நிபுணர்கள் கூறுவது போல 1738 டாலர்களை உடைத்து காட்டினால் இன்னும் சற்று நன்றாகவே அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது, பலத்த சரிவில் காணப்படுவதால், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாமனிய மக்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices remain weak in both MCX and comex, is it right to buy?

Gold price update.. Gold prices remain weak in both MCX and comex, is it right to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X