தங்கம் விலை ஏறுமுகம்.. சென்னையில் இன்றைய தங்கம் விலை என்ன..?

அட்சய திருதியை பண்டிகை முடிந்ததும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தால் சர்வதேச சந்தை காரணத்தால் தங்கம் விலை 2வது நாளே உயர துவங்கியுள்ளது.

இது தங்கத்தை சிறு சேமிப்பு கருவியாகவும், நீண்ட கால முதலீடாக பார்க்கும் அனைத்து நடுத்தர பொருளாதார குடும்பங்களுக்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. ஒரு பவுண்ட் தங்கம் 40000 வரையில் இருக்கும் போது கால் கால் பவுன் ஆக சேர்த்த மக்கள் எண்ணிக்கை தற்போது 50000 ரூபாய்க்கு உயர்ந்த பின்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.

தங்கம் விலை ஏறுமுகம்.. சென்னையில் இன்றைய தங்கம் விலை என்ன..?

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க சந்தை ஜிடிபி மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கி முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் டாலர் மதிப்பு சரிவாலும், பத்திர முதலீடுகள் மீதான லாபத்தின் அளவு சரிந்துள்ள வேளையில் தங்கம் விலை உயர துவங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை சர்வதேச சந்தையிலும் சரி, ஆசிய சந்தையிலும் சரி தங்கம் விலை உயர்வாகவே இருந்தது. இதேவேளையில் தங்கம் விலையும், பத்திர முதலீட்டின் மீதான லாபம் அனைத்தும் அமெரிக்க ஜிடிபி மற்றும் பெடரல் ரிசர்வ்-ன் பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை அடிப்படையில் மாறலாம்.

சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2000 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் அடுத்த 2 மணிநேரத்தில் 1992 டாலர் வரையில் சரிந்துள்ளது, இதனால் தங்க முதலீட்டு சந்தையில் அதிகப்படியான தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.06 சதவீதம் மட்டுமே உயர்ந்து 60,040.00 ரூபாயாக உள்ளது ஜூன் மாத ஆர்டரில். இதேபோல் மே 5ஆம் தேதி முடியும் ஆர்டரில் ஒரு கிலோ வெள்ளி விலை 0.12 சதவீதம் சரிந்து 74,906.00 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 44,680 ரூபாயாக உள்ளது. இதுவே 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்துள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் அதிகரித்து 60,930 ரூபாயாக உள்ளது. இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரீடைல் தங்கம் விலை என்ன..?

தங்கம் விலை ஏறுமுகம்.. சென்னையில் இன்றைய தங்கம் விலை என்ன..?

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : சென்னை - 56,300 ரூபாய், மும்பை - 55,850 ரூபாய், டெல்லி - 56,000 ரூபாய், கொல்கத்தா - 55,850 ரூபாய், பெங்களூர் - 55,900 ரூபாய், ஹைதெராபாத் - 55,850 ரூபாய், கேரளா - 55,850 ரூபாய், புனே - 55,850 ரூபாய், பரோடா - 55,900 ரூபாய், அகமதாபாத் - 55,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,000 ரூபாய், லக்னோ - 56,000 ரூபாய், கோயம்புத்தூர் - 56,300 ரூபாய், மதுரை - 56,300 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : சென்னை - 61,420 ரூபாய், மும்பை - 60,930 ரூபாய், டெல்லி - 61,080 ரூபாய், கொல்கத்தா - 60,930 ரூபாய், பெங்களூர் - 60,980 ரூபாய், ஹைதெராபாத் - 60,930 ரூபாய், கேரளா - 60,930 ரூபாய், புனே - 60,930 ரூபாய், பரோடா - 60,980 ரூபாய், அகமதாபாத் - 60,980 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,080 ரூபாய், லக்னோ - 61,080 ரூபாய், கோயம்புத்தூர் - 61,420 ரூபாய், மதுரை - 61,420 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : சென்னை - 80700 ரூபாய், மும்பை - 76700 ரூபாய், டெல்லி - 76700 ரூபாய், கொல்கத்தா - 76700 ரூபாய், பெங்களூர் - 80700 ரூபாய், ஹைதெராபாத் - 80700 ரூபாய், கேரளா - 80700 ரூபாய், புனே - 76700 ரூபாய், பரோடா - 76700 ரூபாய், அகமதாபாத் - 76700 ரூபாய், ஜெய்ப்பூர் - 76700 ரூபாய், லக்னோ - 76700 ரூபாய், கோயம்புத்தூர் - 80700 ரூபாய், மதுரை - 80700 ரூபாய்.

தங்கம் விலை ஏறுமுகம்.. சென்னையில் இன்றைய தங்கம் விலை என்ன..?

1 சவரன் தங்கம் விலை : சென்னை - 45040 ரூபாய், மும்பை - 44680 ரூபாய், டெல்லி - 44800 ரூபாய், கொல்கத்தா - 44680 ரூபாய், பெங்களூர் - 44720 ரூபாய், ஹைதெராபாத் - 44680 ரூபாய், கேரளா - 44680 ரூபாய், புனே - 44680 ரூபாய், பரோடா - 44720 ரூபாய், அகமதாபாத் - 44720 ரூபாய், ஜெய்ப்பூர் - 44800 ரூபாய், லக்னோ - 44800 ரூபாய், கோயம்புத்தூர் - 45040 ரூபாய், மதுரை - 45040 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+