தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று சர்வதேச சந்தையில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது வலுவடைந்து வந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுவது கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
எனினும் சரிவில் உள்ள பத்திர சந்தையானது தங்கத்திற்குஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது இருந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம். இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டடி விகிதத்தினை அதிகரிக்கவுள்ளது. இதன் காரணமாக சந்தையில் பெரியளவில் மாற்றமில்லை எனலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? வட்டி விகிதம் அதிகரிக்குமா? என்ற பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை வெளியாகவுள்ளது.
முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு
ஒரு வேளை எதிர்பார்ப்பினை போல வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். நிபுணர்கள் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என நம்புகின்றனர். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.
முதலீடுகள் குறையலாம்
வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். மேலும் வ்ட்டி விகிதம் அதிகரிக்கும்போது அது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுக்கும். ஆக டாலரில் வாங்குபவர்களுக்கு விலை உயர்ந்ததாக மாற்றும். இதுவும் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைக்கலாம்.
தங்கம் விலை குறையலாம்
தங்கம் விலையினை மேற்கொண்டு அழுத்தம் கொடுக்கும் விதமாக பத்திர சந்தையும் ஏற்றம் காணும்போது, நிச்சயம் தங்கம் விலை சரிவினை காணலாம். மொத்தத்தில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறைய வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக தங்கம் விலையானது வரும் வாரங்களில் 1800 டாலர்களை உடைக்கலாம் என கணித்துள்ளனர்.
சர்வதேச நிலவரம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 3.20 டாலர்கள் அதிகரித்து, 1816.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் இது பின்னர் குறைய அதிகம் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்
இதே வெள்ளியின் விலையும் கிட்டதட்ட 1% அதிகரித்து, 21.133 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடுமாறி வரும் நிலையில், ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 4,720 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 280 ரூபாய் குறைந்து, 37,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்றும் குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 5150 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 41,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications