இந்தியாவில் வருடம் முழுவதும் டிமாண்டில் இருக்கும் ஒரு சில விஷயத்தில் தங்கம் மிகவும் முக்கியமானது என்றால் மிகையில்லை.
அதிலும் குறிப்பாக திருமண சீசன், அறுவடை காலம், பொங்கல், தீபாவளி, அட்சய திருதியை போன்ற பண்டிகை காலத்திலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாகும். இந்த வருடம் அட்சய திருதியை பண்டிகை ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டப்படும் வேளையில் பலர் இந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் இதேநேரத்தில் தங்கத்தை சேமிப்பாக அல்லாமல் முதலீடாக பார்க்கும் பலர் தற்போதைய விலை நிலவரத்தில் தங்கம் வாங்குவது சரியில்லை என கூறுகின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை மந்தமாகவே உள்ளது, ஆசிய முதலீட்டு சந்தை கைகொடுக்காத காரணத்தால் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 2005 டாலருக்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்ததை போலவே 2000 டாலரை தாண்டி 2010 டாலர் வரையில் உயர்ந்தது.
இந்த சூழ்நிலையில், இந்திய சந்தையில் நேற்றைய வர்த்தக முடிவில் 0.10 சதவீதம் விலை சரிவுடன் முடிவடைந்தது. ஆசிய சந்தையின் மந்த நிலை காரணமாக இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை MCX சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 0.04 சதவீதம் மட்டுமே சரிந்து 60,465 ரூபாயாக உள்ளது. இதனால் இன்று தங்கம் விலை உயர் வாய்ப்புகள் 50 : 50 ஆக உள்ளது.

மேலும் இதே காலக்கட்டத்தில் டாலர் மதிப்பில் பெரிய ஓட்டை விழுந்துள்ள காரணத்தால் அமெரிக்காவின் 10 வருடம் மற்றும் 2 வருடத்திற்கான லாப அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதை சரி செய்ய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மற்றும் தங்கத்தில் முதலீடு செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர வாய்ப்புகள் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications