உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.11,000க்கு மேல் வீழ்ச்சி.. இது நல்ல வாய்ப்பு தான்..!

கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது.

போகிற போக்கை பார்த்தால் மீண்டும் தங்கம் விலையானது நிபுணர்கள் கூறுவதை போல, உச்சத்தினை தாண்டி விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களாகவே சற்று வீழ்ச்சியினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்று விலை அதிகரித்தாலும், விலை கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது இந்திய சந்தையில் தங்கம் விலையானது 11,000 ரூபாய் சரிவில் தான் உள்ளது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

அமெரிக்காவில் பத்திர லாபம், டாலரின் மதிப்பில் சற்று அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. அதே போல நுகர்வோர் விலைக் குறியீட்டெண் சற்று சரிவினைக் கண்டுள்ள நிலையில், அதுவும் டாலரின் மதிப்பில் அழுத்ததினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராம் தங்கம் விலையானது 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், தற்போது 45,000 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இது கிட்டதட்ட 11,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இதே வெள்ளியின் விலையும் தற்போது 68,000 லெவலில் உள்ளது. இதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 77700 என்ற லெவலினை தொட்டது. இன்று மகா சிவாராத்திரி என்பதால், இந்திய சந்தைகள் விடுமுறை. ஆக இது புதன் கிழமையன்று டேட்டாவினை வைத்துக் கணக்கிணப்பட்டுள்ளது.

 

இறுதிகட்டத்தில் ஊக்கத்தொகை அறிவிப்பு

இறுதிகட்டத்தில் ஊக்கத்தொகை அறிவிப்பு

அமெரிக்காவில் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளன. இதன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற நிலையும் நீடித்து வருகின்றது. இது தங்கத்தின் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கத்தினை வாங்க இது சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வர்த்தக அமர்வில் காலை நேரத்தில் தங்கம் விலையானது இருந்ததை போலவே தற்போதும் சற்று ஏற்றத்தில் தான் உள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 10.10 டாலர்கள் அதிகரித்து 1731.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்றைய உச்சமான 1725.30 டாலர்களை உடைத்து, இன்று 1738 டாலர்களாக உச்சம் தொட்டுள்ளது. ஆக இன்று சற்று ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலை 1% அதிகரித்து, 26.392 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக இதுவும் இன்னும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

நீண்டகால நோக்கில் வாங்கலாம்?

நீண்டகால நோக்கில் வாங்கலாம்?

வட்டி குறைவு, பணவீக்கம் என பலவும் தங்கத்திற்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன. அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது குறைந்தபட்ச விலையில் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+