எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இனி தங்கம் வாங்குறத மறந்திடணும் போலிருக்கே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்று நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் இந்திய சந்தையில் இன்று புனித வெள்ளி என்பதால் கமாடிட்டி வர்த்தகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் தாக்கம் இந்திய சந்தையில் திங்கட்கிழமையன்று எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் ஏற்கனவே கூறியதை போல இந்திய சந்தையில் தங்கம் விலையானது, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் விலை சுமார் 5000 ரூபாய் சரிவில் உள்ளது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சமான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும்போது, சுமார் 11,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்ட கால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? தங்கம் ஆபரண விலை நிலவரம் என்ன? ஆபரண வெள்ளியின் விலை நிலவரம் என்ன? இன்று விலை இனி எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? அடுத்த என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

தூள் கிளப்பி வரும் தங்கம் விலை

தூள் கிளப்பி வரும் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது.  கடந்த வியாழக்கிழமையன்று நல்ல ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று புனித வெள்ளி என்பதால் விடுமுறையாகும். அதோடு தங்கத்தில் தினசரி கேண்டில் பேட்டர்னில் புல்லிஷ் என்கல்பிங்க் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இது வரும் வாரத்தில் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிடுகிடு ஏற்றத்தில் வெள்ளி விலை

கிடுகிடு ஏற்றத்தில் வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் நல்ல ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.  வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று கீழாகத் தான் காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளி விலையும்  வரும் வாரத்தில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஏமாற்றம் தரும் ஆபரண தங்கம் விலை

ஏமாற்றம் தரும் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்றும் மீண்டும் பலமான ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்று கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து, 4,267 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, 34,136 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 4655 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 37,240 ரூபாயாகவும் காணப்படுகிறது. இன்றோடு இரண்டு அமர்வுகளாக ஏற்றத்தினை கண்டு வருகிறது.

மீண்டும் ஆபரண வெள்ளி விலை அதிகரிப்பு

மீண்டும் ஆபரண வெள்ளி விலை அதிகரிப்பு

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.50 பைசா அதிகரித்து, 70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1,500 ரூபாய் அதிகரித்து 70,000 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த 2 நாட்களளில் மட்டும் 2,700 ரூபாய் அதிகரித்துள்ளது. இது வெள்ளி நகை ஆர்வலர்களுக்கு சற்றே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

இந்தியாவில் தங்கத்திற்கான சில்லறை தேவைகள் அதிகரித்து வருகின்றது. இது எனினும் இது அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற கவலையையும் உருவாக்கியுள்ளது. எனினும் அரசின் இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் இறக்குமதி மார்ச் மாதத்தில் 471% அதிகரித்து 160 டன்னாக அதிகரித்துள்ளது.

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறித்த குறியீடுகள் சற்றே உயர்ந்துள்ள நிலையில், வேலையின்மை குறித்தான க்ளைம் கோரிக்கைகளும் உயர்ந்துள்ளன. இதனால் பத்திர லாபம் சற்று அழுத்தத்தினை கண்டுள்ளது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பு சற்று அழுத்தத்தினை கண்ட நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் சற்று ஏற்றம் காணலாம் என்று கூறப்பட்டாலும், இன்று வரையில் முக்கிய லெவலான 1760 டாலர்களை உடைத்துக் காட்டவில்லை. அதற்கு கீழாகவே காணப்படுகிறது. எனினும் இதுவரை 1660 டாலர்களையும் உடைத்துக் காட்டவில்லை. இந்த நிலையில் முக்கிய சப்போர்ட் லெவல் 1682 - 1675 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1720 - 1725 டாலர்களாகும்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கத்தினை பொறுத்த வரையில் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் இந்திய சந்தைகள் விடுமுறை என்பதால், திங்கட்கிழமையன்று இதன் எதிரொலி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அன்று டாலரின் மதிப்பு, பத்திர லாபம் உள்ளிட்ட சர்வதேச காரணிகள் எப்படி வரவுள்ளதோ அதனை பொறுத்து, மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices rises second day, silver rates also jump

Gold price update.. Gold prices today struggle again, is it right time to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X