உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.11,500க்கு மேல் சரிவு.. இது வாங்க சரியான நேரம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது சற்று ஏமாற்றத்தினை கொடுக்கும் விதமாக இருந்தாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 11,500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது.

 

ஆக குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். இதனால் தங்கம் விலையில் ஏற்படும் அதிக சரிவினை இது தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச காரணிகள் பலவும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தற்போது எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? குறிப்பாக இன்று எப்படி இருக்கும்? என பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது இரண்டு நாள் சரிவுக்கு பிறகு, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 6.75 டாலர்கள் அதிகரித்து, 1731.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. தங்கம் விலையானது இன்று ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
 

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்


தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.07% அதிகரித்து, 25.247 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் வார கேண்டில் பேட்டர்னில் குறையும் விதமாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 213 ரூபாய் அதிகரித்து, 44,859 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 278 ரூபாய் அதிகரித்து, 65,250 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

உச்சத்தில் இருந்து சரிவில் தங்கம் விலை

உச்சத்தில் இருந்து சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் இரண்டு நாள் சரிவுக்கு பிறகு, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது இன்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 11,500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் குறையுமா? இந்த சரிவு நீடிக்குமா? அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. எனினும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வாங்க ஒரு நல்ல இடமாக பார்க்கப்படுகிறது.

பரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனா

பரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனா

அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று வலுவாக காணப்படும் நிலையில் கூட, தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது அதிகரித்து வரும் பத்திரலாபம்,. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம், இதனையடுத்து பல இடங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனாலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது.

தங்கத்தின் லெவல்கள்

தங்கத்தின் லெவல்கள்

தங்கத்தின் விலையானது அவுன்ஸுக்கு 1670 - 1680 டாலர்கள் வரை சரிவினை காணலாம். ஆனால் 1750 டாலருக்கு மேலேயே இருந்தால், மேலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மீடியம் டெர்மில் பத்திர லாபமும், அமெரிக்க டாலரும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல்கள் 44,700 - 44,600 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 45,000 - 45,100 ரூபாயாகும்.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

அமெரிக்கா - சீனா பிரச்சனை, அமெரிக்கா - ரஷ்யா பிரச்சனை என பல்வேறு சர்வதேச பிரச்சனைகளையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதோடு மீண்டு வரும் பொருளாதாரம் குறித்த அறிக்கைகள் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்பதால் அதனையும் முதலீட்டாளர்கள் கண்கானித்து வருகின்றனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது. அதோடு பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில், வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது 11,500 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுவதால், இது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்ட கால நோக்கிலும் தங்கம் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices rises today but still down Rs.11,500 from record high, is it right time to buy?

Gold price update.. gold prices rises today but still down Rs.11,500 from record high, is it right time to buy?
Story first published: Wednesday, March 24, 2021, 12:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X