தங்கம் வாங்க இது பொன்னான வாய்ப்பு.. இரண்டாவது நாளாக தொடரும் சரிவு.. இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ச்சியாக இந்த வார தொடக்கத்தில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் விலையானது, தற்போது வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது. இது தங்கம் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் என்றாலே புன்னகைக்கும் நம்மவர்கள், அதனை குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால் வேண்டாம் என்று சொல்வார்களா என்ன? நிச்சயம் பலரும் இந்த குறைந்த விலையில் வாங்க நினைக்கலாம். ஆனால் இதுவே தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட்ஜெட்டில் 2021ல் வெளியான இறக்குமதி வரி குறைப்பு காரணமாக இறக்குமதி அதிகரிக்கும். இதனால் விலை குறையலாம். எனினும் குறைந்த விலை அதிகம்பேரை வாங்க தூண்டும் என்பதால், இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் விலையானது நேற்றே முதலீட்டாளர்களை குஷிப்படுத்தும் விதமாக நல்ல சரிவினைக் கண்டது. இன்றும் இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. ஆக முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம். ஏனெனில் குறைந்த விலையில் தங்கம் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளதே.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இரண்டாவது நாளாக இன்று குறைந்து வருகிறது. இது இன்னும் குறையுமா? வாரத்தின் கடைசி நாளான இன்று எப்படி இருக்கும்? விலை குறையுமா? எவ்வளவு குறையும்? சர்வதேச காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் உள்ளன. வெள்ளி விலை நிலவரம் என்ன? இனியும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கலாம் வாருங்கள்.

Comex தங்கம் விலை நிலவரம்

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இந்த வாரத் தொடக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வந்தது. எனினும் இன்றோடு இரண்டாவது நாளாக மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இது தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 4.65 டாலர்கள் குறைந்து, 1822.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. அதோடு குறைந்தபட்ச விலையும் உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் இன்று குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது இன்று சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 0.04% அதிகரித்து, 27.058 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 27.047 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 27.045 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளி விலையானது தற்போது சற்று ஏற்றம் கண்டிருந்தாலும், விலை குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 40 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 47,468 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்று 47,508 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 47,411 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 308 ரூபாய் அதிகரித்து, 68,800 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்து தான் தொடங்கியுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சரிந்து வருகின்றது. அதோடு அமெரிக்க பத்திர லாபமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது மேலும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் மூதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளன.

Array

Array

தங்கத்திற்கான முக்கிய ரெசிஸ்டன்ஸ் விகிதம் 1870 டாலர்கள் என்றாலும், இன்று செல்லிங் பிரஷர் அதிகம் இருப்பதால் விலை குறையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி குறையும்பட்சத்தில் 1790 டாலர்கள் முக்கிய சப்போர்ட் விகிதமாகவும் பார்க்கப்படுகிறது.

இதே இந்திய சந்தையில் தங்கத்தின் சப்போர்ட் விலை 46,220 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் விகிதம் 48,060 ரூபாய் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

தங்கம் சிறந்த ஹெட்ஜிங்

தங்கம் சிறந்த ஹெட்ஜிங்

பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கமானது, பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மிகப்பெரிய அளவில் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டால், அதனால் டாலரின் மதிப்பு வலுவடையும். ஆக இது சந்தைக்கு சாதகமாக அமையும். அதோடு அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றம் செய்யாது என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. ஆக இதுவும் தங்கம் விலை குறைய ஒரு காரணமாக அமையும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகள், மறுபுறம் அமெரிக்காவின் ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்புகள், இப்படி பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன. எனினும் அதிகரித்து வரும் கொரோனா, அமெரிக்கா டாலரின் மதிப்பு அவ்வப்போது தங்கத்தின் விலையில் மாற்றத்தினைக் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்ல விஷயமே. ஏனெனில் கேண்டில் பேட்டர்ன்களும் தங்கம் விலை இன்று சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices second day fall in Comex market

Gold price update.. Gold prices second day fall in Comex market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X