குஷிப்படுத்தும் தங்கம் விலை.. 2-வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ச்சியாக ஐந்து நாட்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்றோடு இரண்டாவது நாளாக இந்திய சந்தையில் சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

 

இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை குஷிப்படுத்தும் விதமாக சரிவினைக் கண்டுள்ளது.

கூடுதலாக ஆபரணத் தங்கத்தின் விலையும் இரு நாட்களுக்கு பிறகு, இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

ஆக முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம். ஏனெனில் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த இரு அமர்வுகளாகவே சரிந்து வருகின்றது. அதிலும் சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படும் இந்த நேரத்தில், குறைந்திருப்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, மீண்டும் குறையுமா? இன்று எப்படி இருக்கும்? தற்போது காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் உள்ளன. இனி நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கலாம் வாருங்கள்.

Comex தங்கம் விலை நிலவரம்
 

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஏற்றத்தினையே கண்டு வந்தது. இடையில் அவ்வப்போது சரிவினைக் கண்டு இருந்தாலும், தொடர்ச்சியாக ஏற்றத்தில் தான் உள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 2.05 டாலர்கள் அதிகரித்து, 1784.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போல அல்லாமல், வெள்ளியின் விலையானது இன்று இரண்டாவது நாளாக சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது சற்று சரிவினைக் கண்டு, 26.105 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 26.180 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 26.152 டாலர்களாக தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையிலும் தங்கம் சற்று சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 48 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 47,724 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்று 47,772 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 47,885 ரூபாயாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இந்திய சந்தையில் வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. இரண்டாவது நாளாக குறைந்து வரும் வெள்ளியின் விலை, இன்று கிலோவுக்கு 296 ரூபாய் குறைந்து, 68,922 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்து தான் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று ஆபரண தங்கம் விலை

இன்று ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 4,502 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 36,016 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தங்கம் விலையானது கடந்த இரண்டு நாட்களாகவே அதிகரித்திருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

இதே போல சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 4,910 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 39,280 ரூபாயாகவும் காணப்படுகிறது. தூய தங்கத்தின் விலையும் இரு நாட்களுக்கு பிறகு சற்று குறைந்துள்ளது.

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த இரு நாட்களாகவே பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று கிராமுக்கு 1.10 ரூபாய் குறைந்து, 74.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1100 ரூபாய் குறைந்து, 74,600 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது இரண்டாவது நாட்களாக அதிகரித்திருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

டாலர் மதிப்பில் அழுத்தம்

டாலர் மதிப்பில் அழுத்தம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லை. இது அமெரிக்காவின் பத்திர லாபம் சரிந்து வரும் நிலையில், டாலரின் மதிப்பு சற்று வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. மேலும் சரிந்து வரும் சர்வதேச பங்கு சந்தைகளும், விலை உயர்ந்த உலோகங்களுக்கு ஆதரவாக உள்ள நிலையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது தங்கம் விலையில் அதிக சரிவினைக் தடுத்துள்ளது.

புராபிட் புக்கிங் செய்யலாம்

புராபிட் புக்கிங் செய்யலாம்

சர்வதேச சந்தையில் ஏற்றத்தில் உள்ள நிலையில் இந்திய சந்தையில் மட்டும் எப்படி விலை குறைகிறது என் கேள்விகள் எழுந்திருக்கும். இன்று இந்திய சந்தைகளின் வார இறுதி நாள் என்பதால், மீடியம் டெர்ம் மற்றும் குறுகிய கால வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். இதனால் சந்தையானது சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. அதோடு இந்திய எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் டெக்னிக்கலாகவும் சற்று சரியும் விதமாக உள்ளது. ஆக குறையும் போது வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா தடுப்பபூசி போடப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் பற்றாக்குறை நிலவி வருகின்றது.. இதன் காரணமாக பொருளாதார மீட்சி இன்னும் தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் மீண்டும் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக தங்க வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்ல விஷயமே. ஏனெனில் கேண்டில் பேட்டர்ன்களும் தங்கம் விலை இன்று சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices second day fall in MCX, jewellery prices also slump

Gold price update.. Gold prices second day fall in MCX, jewellery prices also slump
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X