இரண்டாவது நாளாகவும் தங்கம் விலை வீழ்ச்சி.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வாரம் தொடங்கி ஆறு வர்த்தக தினங்களாகவே தொடர்ந்து செம ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, நேற்று முதலீட்டாளர்களை குஷிப்படுத்தும் விதமாக நல்ல சரிவினைக் கண்டது.

ஆக முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையில் இப்படி சரமாரியாக ஏற்றம் கண்டு வருகிறதே, குறையவே குறையாதா? என்ற கேள்விக்கு ஏற்றாற்போல் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 10 கிராம் தங்கம் விலையானது 1000 ரூபாய் சரிந்துள்ளது.

ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஐடிசி-யின் தரமான சம்பவம்.. ஓரே மாதத்தில் 25% வளர்ச்சி..! ஐடிசி-யின் தரமான சம்பவம்.. ஓரே மாதத்தில் 25% வளர்ச்சி..!

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்றும் அதேபோல குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இன்று எப்படி இருக்கும்? விலை குறையுமா? எவ்வளவு குறையும்? சர்வதேச காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் உள்ளன. இனியும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கலாம் வாருங்கள்.

Comex தங்கம் விலை நிலவரம்

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்தது. இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக நேற்று செம சரிவினைக் கண்டது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸூக்கு 4.65 டாலர்கள் அதிகரித்து, 1843.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட குறைந்துள்ள நிலையில், இன்று குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கப்பார்க்கின்றனர்.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் நேற்று பலத்த சரிவினைக் கண்டது. எனினும் இன்று 0.31% அதிகரித்து, 24.065 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 23.990 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 23.992 டாலர்களாக தொடங்கியுள்ளது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையிலும் தங்கம் சற்று சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 50 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 49,210 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்று 49,260 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 49,165 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இந்திய சந்தையில் வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. மூன்றாவது நாளாக குறைந்து வரும் வெள்ளியின் விலை, இன்று கிலோவுக்கு 112 ரூபாய் குறைந்து, 63,387 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்து தான் தொடங்கியுள்ளது.

பட்டையை கிளப்பிய பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பிய பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள் பல வித சாதகமான காரணங்களினால் புதிய உச்சத்தினை எட்டி வருகின்றன. இது அடுத்தடுத்து கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், ஏற்றம் கண்டுள்ளன. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் ஊக்கத் தொகை குறித்தான சாதகமான அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. இதன் காரணமாகவும் ஆசிய சந்தைகள் நேற்று பலத்த ஏற்றத்தினை கண்டன. இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளன.

தங்கம் சிறந்த ஹெட்ஜிங்

தங்கம் சிறந்த ஹெட்ஜிங்

பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கமானது, பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மிகப்பெரிய அளவில் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டால், அதனால் டாலரின் மதிப்பு வலுவடையும். ஆக இது சந்தைக்கு சாதகமாக அமையும். இதுவும் தங்கம் விலை குறைய ஒரு காரணமாக அமையும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி என்ன சொல்லப்போகிறது?

ஐரோப்பிய மத்திய வங்கி என்ன சொல்லப்போகிறது?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் சாதகமாக வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கி அடுத்து என்ன அறிவிப்பினை சொல்லப்போகின்றது என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தாமதமாக்கி கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன.இதுவும் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து

பிரிட்டன் முதன் நாடாக கொரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இனி அடுத்து சில முன்னணி நாடுகளும் விரைவில் ஒப்புதல் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதனை தடுக்க முடியும். மொத்தத்தில் பொருளாதாரம் மேற்கொண்டு சரிவதனை தடுக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகள், மறுபுறம் அமெரிக்காவின் ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள், ஐரோப்பிய மத்திய வங்கியும் பெரியளவில் ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்புகள், இப்படி பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன. எனினும் அதிகரித்து வரும் கொரோனா, அமெரிக்கா டாலரின் மதிப்பு அவ்வப்போது தங்கத்தின் விலையில் மாற்றத்தினைக் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்ல விஷயமே. ஏனெனில் கேண்டில் பேட்டர்ன்களும் தங்கம் விலை இன்று சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices second day fall in MCX market

Gold price update.. Gold prices second day fall in MCX market
Story first published: Thursday, December 10, 2020, 12:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X