தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது நல்ல செய்தியாச்சே..எவ்வளவு வீழ்ச்சி..ஒரு கெட்ட செய்தியும் உண்டு!

உலகளவில் கொரோனாவின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது 18,53,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே 1,14,247 பேர் பலியாகியுள்ளனர்.

அந்தளவுக்கு உலகெங்கிலும் கொரோனாவின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிலும் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் ருத்ர தாண்டவம் எடுத்து ஆடி வரும் நிலையில், முதலீட்டாளார்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இப்படியும் இருக்கலாம்

இப்படியும் இருக்கலாம்

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி 2.3 டிரில்லியன் டாலர் நிதியினை அந்த நாட்டு சிறு குறு நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும். இது சிறு நிறுவனங்களை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் விலை குறைய இது வழி வகுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 புராபிட் புக்கிங் தான் காரணம்

புராபிட் புக்கிங் தான் காரணம்

இதே மறுபுறம் கமாடிட்டி பொருளாதார நிபுணர்கள், தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது புராபிட் புக்கிங் தான். அதனால் தான் விலை சற்று குறைந்துள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் விலை குறைவதாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று காலையில் அவுன்ஸூக்கு 21.30 டாலர்கள் குறைந்து 1731 ஆக வர்த்தகமாகி வருகிறது. அதாவது 1.22% வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இரண்டாவது நாளாக வீழ்ச்சி கண்டுள்ளது.

எம்சிஎக்ஸ் விலை

எம்சிஎக்ஸ் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், MCX சந்தையில் தங்கம் விலையானது 466 ரூபாய் அதிகரித்து, தற்போது 45,460 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையில் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை கண்டுள்ளது. கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரையில், கடந்த சில தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கம் விலையைப் போலவே சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 2.93% வீழ்ச்சி கண்டு, 0.471 டாலர்கள் குறைந்து 15.582 டாலராக குறைந்து வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் தேவையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், அது வெள்ளியின் விலையில் எதிரொலித்து வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை குறைந்திருந்தாலும், எம்சிஎக்ஸ் சந்தையில் விலை 278 ரூபாய் அதிகரித்து 43,780 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது தொடர்ந்து 6 வர்த்தக தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஐந்து தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு 4,044 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32,352 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. தங்கம் தேவையானது குறைந்து வந்தாலும் தொடர்ந்து விலையானது கடந்த ஐந்து தினங்களாகவே அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 41.16 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 41,160 ரூபாயாகவும் உள்ளது. தங்கம் விலையைப் போல கடந்த ஐந்து தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவினால் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது தொடர்ந்து அதிகளவில் மாற்றம் கண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+