தங்கம், வெள்ளி விலை கடந்த வெள்ளிக் கிழமையன்று ஒரே நாளில் 1000 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது ஏன்?
சர்வதேச அளவில் கொரோனா வைரஸின் காரணமாக சர்வதேச சந்தையின் எதிரொலியாக அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இதன் காரணமாக பாதுகாப்பு உபகரணமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி
எனினும் இதில் அதிர்ஷ்டவசமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 சதவீதம் குறைந்துள்ளது. இது கிட்டதட்ட 1000 ரூபாய் குறைந்து, 45,732 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. இதே வெள்ளியின் விலையானது கிட்டதட்ட 3 சதவீதம் வீழ்ச்சி கண்டு, அதாவது 1500 ரூபாய் குறைந்து 47,337 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
வேலை குறித்த டேட்டா
கடந்த வெளியான அமெரிக்காவில் வேலை குறித்தான டேட்டா நேர்மறையாக வந்தமையால், பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக முதலீட்டாளர்கள் மத்தியில் எண்ணம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச பொருளாதாரம் விரைவில் மீண்டு வருவதை இது காட்டுகிறது.
வேலையின்மை விகிதம்
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் வேலைகளை இழந்த நிலையில், தற்போது புதியதாக வேலைக்கு அமர்த்தும் விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு வேலையின்மை விகிதமும் ஏப்ரல் மாதத்தில் 14.7 சதவீதத்தில் இருந்து, 13.3 சதவீதமாக குறைந்துள்ளது.
பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்
இது தவிர பல நாடுகள் லாக்டவுன் தளர்வு காரணமாக உலகளாவிய பொருளாதாரம் மீள்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக இருந்த நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. எனினும் தற்போது புதிய ஹாட்ஸ்பாட்கள் உருவாக ஆரம்பித்துள்ளன.
வெள்ளி விலையும் வீழ்ச்சி
எனினும் கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையானது 2 சதவீதம் குறைந்து 1688 டாலர்களாக வர்த்தகமாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தி 7 வருடத்தில் இல்லாத அளவுக்கு கண்ட நிலையில், தங்கம் விலையானது சர்வதேச அளவில் பெரும் அளவில் மாற்றத்தினை கண்டுள்ளது.
பெரிய தூண்டுதல் வரலாம்
மேலும் தற்போது அமெரிக்கா சீனாவில் நிலவி வரும் பதற்றம் காரணமாக, தங்கம் விலையில் எதிரொலிக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதோடு ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த வியாழக்கிழமையன்று பத்திர கொள் முதலை எதிர்பார்த்ததை விட பெரிய ஊக்கத்தினை அறிவித்தது. இதற்கிடையில் அமெரிக்கா பெரியதொரு தூண்டுதலுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications