ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை.. நடுத்தர மக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

தங்கம் விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. எனினும் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றது.

அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலையானது 11,500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நடுத்தர மக்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையானது டெக்னிக்கலாக சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, பணவீக்கமும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை எப்படி இருக்கும்? இன்று எப்படி இருக்கும்? என பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 3.60 டாலர்கள் அதிகரித்து, 1734.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் ஏற்றம் காணும் விதமாக காணப்படுகிறது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு தங்கத்தின் முக்கிய லெவலான 1738 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் முடிவு விலையானது 1730.90 டாலர்களாகும்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போல அல்லாமல், வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமில்லா விட்டாலும், சற்று சரிந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.23% குறைந்து, 25.940 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையானது இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 155 ரூபாய் அதிகரித்து, 44,968 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில், வெள்ளியின் விலையும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 31 ரூபாய் அதிகரித்து, 66,951 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் வெள்ளியின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்திலேயே காணப்படும். கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

தங்கம் விலையில் அழுத்தம்

தங்கம் விலையில் அழுத்தம்

முதலீட்டாளர்கல் ஃபெடரல் கூட்டத்தினை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளனர். அதோடு அமெரிக்க பத்திர லாபமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தங்கத்தின் மீது ஒரு அழுத்தம் காணப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகை செய்துள்ளது. எனினும் இன்று ஆசிய சந்தைகள் பெரும்பாலும் சரிவில் காணப்பட்டன.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

எனினும் டாலருக்கு எதிரான நாணயங்களுடன் ஒப்பிடும்போது டாலரின் மதிப்பு வலுவாக இருந்தது. ஆக இப்படி பல காரணங்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பொறுமையுடன் இருந்ததால், தங்கம் விலையானது சீராக வர்த்தகமாகிக் கொண்டுள்ளது. வலுவான டாலர், பத்திர லாபம், தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் என பலவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை தாக்கியது.

தங்கம் விலை முக்கிய லெவல்கள்

தங்கம் விலை முக்கிய லெவல்கள்

நிபுணர்கள் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டாலும், ஒரு வேளை மீண்டும் 1660 டாலர்களை உடைத்தால் தங்கம் மீண்டும் சரிய ஆரம்பிக்கும் என்று கூறுகின்றனர். அப்படி இல்லாவிட்டால் தங்கம் ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறியுள்ளனர்.

நிபுணர்களின் எதிர்பார்ப்பு

நிபுணர்களின் எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கிக் கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்ந்து பூஜ்ஜியத்துக்கு அருகிலேயே இருக்கும். பத்திர கொள்முதலும் வழக்கம்போல தொடரலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர். ஆக இதனால் நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு இது உறுதுணையாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் பற்றிய அச்சம்

பணவீக்கம் பற்றிய அச்சம்

அமெரிக்காவின் ஊக்கத்தொகைகள் பற்றிய அறிவிப்புகள் இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், விரைவில் இது அமெரிக்கர்களுக்கு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. இது அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. எனினும் இந்த வாரம் நடக்கவுள்ள ஃபெடரல் வங்கி கூட்டத்தில் பாலிசிகளில் முக்கிய மாற்றங்கள் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட பரவல் குறித்த கவலை

இரண்டாம் கட்ட பரவல் குறித்த கவலை

உலகின் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் இரண்டாம் கட்ட பரவல் என்பது பல நாடுகளில் படையெடுக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே வரலாறு காணாத அளவு உயிர்சேதத்தினையும், பொருளாதார சேதத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக இரண்டாம் கட்ட பரவலால் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வருமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டாலும், கேண்டில் பேட்டர்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது, பலத்த சரிவில் காணப்படுவதால், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+