கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது மூன்றாவது வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே சரிவினைக் கண்டு வந்த தங்கத்தினை, குறைந்த விலையில் பலரும் வாங்க முற்பட்டிருக்கலாம். ஆக இது தங்கம் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்பட்டது.

 

எனினும் இன்று இந்திய சந்தையானது இன்று மகா சிவராத்திரி என்பதால் விடுமுறையாகும். ஆக இதன் எதிரொலி, இந்திய சந்தையில் நாளை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலையும் சில தினங்களாக ஏற்றம் கண்டு வருகிறது.

இன்று என்னென்ன பார்க்க இருக்கிறோம்?

இன்று என்னென்ன பார்க்க இருக்கிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளியின் விலை நிலவரம் என்ன? ஆபரணத் தங்கம் விலை நிலவரம், வெள்ளி விலை நிலவரம் என்ன? தூய தங்கத்தின் விலை நிலவரம் என்ன? தங்கம் மற்றும் வெள்ளிக்கு சாதகமான மற்றும் பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்றோடு மூன்றாவது நாளாக ஏற்றத்தினை கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 11 டாலர்கள் அதிகரித்து 1732.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. முந்தைய அமர்வில் 1721.80 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று 1725.15 டாலர்களாக தொடங்கியுள்ளது. வார கேண்டிலும் பையிங் டிரெண்டிக்கு மாறி வரும் நிலையில், தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல வாய்ப்பு தான்.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்
 

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 10.10% ஏற்றம் கண்டு, 26.418 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையானது முந்தைய அமர்வில் 26.130 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 26.265 டாலர்களாக தொடங்கியுள்ளது. வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கம் ஆபரண விலை

தங்கம் ஆபரண விலை

சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 4,239 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து, 33,912 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இனி இந்தியாவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், இந்தியாவில் ஆபரணத் தங்கத்தில் எதிரொலிப்பது கடினமாகவே உள்ளது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், இன்று கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து, 4,624 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து, 36,992 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் கடந்த ஆறு தினங்களில் ஒரு நாள் மட்டுமே சரிவினைக் கண்டுள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்திருந்தாலும், கிராம் வெள்ளியின் விலையானது 4 ரூபாய் குறைந்து, 67.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 4,000 ரூபாய் குறைந்து 67,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் பத்திர லாபம்

அதிகரித்து வரும் பத்திர லாபம்

தொடர்ந்து அதிகரித்து வரும் அமெரிக்க பத்திர லாபம் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமான வட்டியில்லா முதலீட்டில் முதலீடுகள் குறைந்தன. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டது. எனினும் இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்போது, தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட்டாக 1700 டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் வட்டியில்லா முதலீடாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் பணவீக்கத்திற்கு எதிராக தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

தங்கம் விலை என்னவாகும்?

தங்கம் விலை என்னவாகும்?

இன்று தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இந்திய சந்தைகள் விடுமுறை என்பதால், நாளை இதன் எதிரொலி இருக்கலாம். நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்க நல்ல இடமாக பார்க்கப்படுகிறது. எனினும் குறுகிய கால அல்லது இண்டிராடே வர்த்தகர்கள் நாளை வர்த்தக தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம். இதே ஆபரணத் தங்கம் விலை வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices start to rise in international market

Gold price updates.. gold prices start to rise in international market
Story first published: Thursday, March 11, 2021, 13:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X