குறைந்த விலையில் தங்கம்.. இது வாங்க சரியான நேரமா.. இன்றைய நிலவரம் என்ன பாருங்க..!

கடந்த வாரத்தில் தங்கம் விலையானது பெரிய அளவில் மாற்றமின்றி வர்த்தகமாகியது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சற்று அதிகரித்தே காணப்படுகிறது.

எப்படியிருப்பினும் இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இது நடப்பு வாரத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாகவே காணப்படுகிறது.

இதற்கிடையில் இன்று காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய சந்தையில் எவ்வளவு? குறிப்பாக ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன? சந்தைக்கு சாதக, பாதகமான முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

மீடியம் டெர்மில் தங்கம்

மீடியம் டெர்மில் தங்கம்

அமெரிக்கா டாலர் மதிப்பானது சற்றே அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இது வரலாற்று உச்சத்தில் இருந்தும் சுமார் 9,000 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படும் நிலையில், இதுவும் தங்கம் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

வார கேண்டில் பேட்டர்ன்

வார கேண்டில் பேட்டர்ன்

தங்கத்திற்கு சாதகமாக சில காரணிகள் இருந்தாலும், வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் தினசரி கேண்டில் பேட்டர்னிலும் தங்கம் விலை இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்கவும், மீடியம் டெர்மில் வாங்கவும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 5.15 டாலர்கள் அதிகரித்து, 1782.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.50% அதிகரித்து, 26.218 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியும் வார மற்றும் தினசரி பேட்டர்னில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய தங்கம் விலை நிலவரம்

இந்திய தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 153 ரூபாய் அதிகரித்து, 47,078 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய வெள்ளி விலை நிலவரம்

இந்திய வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் தான் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 325 ரூபாய் அதிகரித்து, 68,198 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மூன்று நாட்களாகவே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு மாற்றமில்லாமல், 4,446 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,568 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

 

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது, 4,850 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 73.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 73,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் விலையானது சற்று சரிந்துள்ள நிலையில் அதன் முக்கிய சப்போர்ட் லெவல் - 1768 - 1755 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 1792 - 1808 டாலர்களாகும்.

இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல் - 46,750 - 46,550 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 47,055 - 47,300 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - 67,400 - 66,900 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 68,200 - 68,800 ரூபாயாகும்

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கி வைக்கலாம். இது சரியான வாய்ப்பு தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+