உச்சத்திலிருந்து 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.4600 வீழ்ச்சி.. இது நல்லா இருக்கே..இப்போது வாங்கலாமா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலையானது சரியுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஆனால் அப்படி எதிர்பார்க்கப்படும் நிகழ்வினை இன்றைய சந்தையில் பார்க்க முடியுமா? சந்தைக்கு சாதகமாக அப்படி ஏதும் நிகழ்வுகள் உள்ளதா வாருங்கள் பார்க்கலாம்.

இன்றைய தங்கம் விலையானது எப்படி இருந்தாலும், இன்றைய நிலவரப்படி, இந்த மாதத்தில் சென்ற அதிகபட்ச உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலையானது சுமார் 4,600 ரூபாய் சரிவில் தான் உள்ளது.

உச்சம் தொட்ட தங்கம் விலை
 

உச்சம் தொட்ட தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் டாலர் மதிப்பால் அவ்வப்போது சற்று சரிவினையும் கண்டு வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் நடப்பில் வர்த்தகமாகி வரும் அக்டோபர் மாத கான்ட்ராக்டில், ஆகஸ்ட் 7 அன்று 56,200 ரூபாயினை தொட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று சுமார் 51,500 லெவலில் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

ஃபெடரல் வங்கி கொள்கை

ஃபெடரல் வங்கி கொள்கை

எனினும் இன்று மீண்டும் இரண்டு வார உச்சத்தில் தங்கம் விலையானது வர்த்தகமாக தொடங்கியுள்ளது. சரி என்ன காரணம்? கடந்த வாரம் ஒரு நல்ல சரிவினைக் கண்ட நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதே. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை கட்டமைப்பு எனவும் கூறப்படுகிறது. இந்த கொள்கைகள் தங்கம் விலையை ஆதரித்து வருகிறது.

குறைவான வட்டி விகிதம்

குறைவான வட்டி விகிதம்

கடந்த வாரத்தில் அமெரிக்கா ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், மத்திய வங்கி சராசரி பணவீக்க இலக்கினை ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறியிருந்தார். அதாவது அவை நீண்ட காலத்திற்கு வட்டி விகிதம் அப்படி இருப்பதையே கூறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் குறைந்த வட்டி விகிதங்கள் என்பது அதன் தாக்கத்தினை டாலரின் பிரதிபலிக்கின்றன. இது பத்திர லாபத்தினையும் குறைக்க வழி வகுக்கின்றன.

புதிய அணுகுமுறைக்கு வழிவகுக்கலாம்
 

புதிய அணுகுமுறைக்கு வழிவகுக்கலாம்

இதே போல் பலவீனமான அமெரிக்கா டாலர் மற்றும் மற்ற நாணயங்களை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை மலிவானதாக ஆக்குகிறது. ஆக பவலின் இந்த அறிக்கையானது, நிச்சயம் அமெரிக்கா பெடரல் வங்கி ரிசர்வ் வங்கி கொள்கை கட்டமைப்பில் மாற்றத்தினை கொண்டு வரலாம். இது புதிய அணுகுமுறைக்கு வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் பொருளாதாரத்தினை ஆதரிக்க தேவைப்படும் வரையில் வட்டி விகிதம் அப்படியே இருக்கலாம் என்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டாளர்களின் எண்ணம்

முதலீட்டாளர்களின் எண்ணம்

இவ்வாறு செய்யும் போது டாலரின் மதிப்பானது பலவீனமாகவே இருக்கும். ஆக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையினை இது ஆதரிக்கலாம் என்றும் ஜியோஜித் அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த ஞாயிற்றுகிழமையோடு கொரோனாவின் தாக்கமானது 25 மில்லியனை தாண்டியுள்ள நிலையில், உலகம் முழுக்க உள்ள மத்திய வங்கிகளின் நிதிக் கொள்கைகளும், தூண்டுதல் தொகுப்புகளும் இருக்கலாம் என்ற எண்ணமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்

தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்

இதற்கிடையில் தற்போது வரையிலேயே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 30% அதிகரித்துள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் இந்தியாவில் இன்று தங்க பத்திரங்களுக்கான விற்பனை இன்று தொடங்குகிறது. இது கிராமுக்கு விலையினை 5,117 ரூபாயினை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் தான் உள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 3.10 டாலர் அதிகரித்து 1978 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தொடர்ச்சியாக மூன்றாவது வர்த்தக தினத்தில் தங்கம் விலையானது இன்று சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது கடந்த சில வாரங்களாகவே தங்கத்திற்கு இணையாக, சொல்லப்போனால் தங்கத்தினை விட அதிகமாகவே வர்த்தகமாகி வருகின்றது. இன்று மூன்றாவது நாளாக அதிகரிக்க தொடங்கியுள்ள வெள்ளியின் விலையானது தற்போது 1.87% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.510 டாலர்கள் குறைந்து, 28.285 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக 10 கிராம் தங்கம் விலையானது 202 ரூபாய் அதிகரித்து, 51,650 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.41% ஏற்றத்தில் காணப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஏற்றம் காணத் தொடங்கியுள்ள தங்கம் விலையானது இன்று அதிகரித்து காணப்பட்டாலும், இந்த மாத உச்சத்தில் இருந்து சுமார் 4,500 சரிவிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது 1.85% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது கிலோவுக்கு 1223 ரூபாய் அதிகரித்து, 67,199 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த இரண்டு சந்தை தினங்களாக ஏற்றம் கண்டு வரும் வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்துடன் தொடங்கியிருந்தாலும், இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் உச்சத்தில் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது மீண்டும் புதிய உச்சத்தினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பயன்படுத்தப்படும் தங்கத்தினால்;, இது சிறந்த ஹெட்ஜிங் ஆக பயன்படுத்தப்படுகிறது. ஆக நிபுணர்கள் ஏற்கனவே கூறியது போல தங்கம் விலையானது மீண்டும் உச்சத்தினையே தொட வாய்ப்புள்ளது. ஆக தங்கத்தினை எப்போதெல்லாம் விலை குறைகின்றதோ அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices starts to rise today, but it’s down Rs.4,600 from august month high

Gold prices starts to increase today, but it’s down Rs.4,600 from august month high, also analysts said Gold price is expected to retest the old new highs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X