உச்சத்திலிருந்து 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,280 வீழ்ச்சி.. இது சூப்பர் சான்ஸ் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த மூன்று தினங்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. எனினும் இன்றும் தங்கம் விலையானது குறையுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இன்றைய தங்கம் விலையானது தற்போதைக்கு சற்று அதிகரித்து காணப்பட்டாலும், சமீபத்திய உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது 5,000 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது.

ஆக இதுவே முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கும் என்று கூறி வரும் நிபுணர்கள், சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் வாங்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஆக நிச்சயம் இது முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் இருந்து ரூ.5,280 வீழ்ச்சி
 

உச்சத்தில் இருந்து ரூ.5,280 வீழ்ச்சி

சர்வதேச பங்கு சந்தைகள் சரிந்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு கைகொடுக்கும் விதமாக வெள்ளியின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. எனினும் கடந்த மாத உச்சமான 56,200 ரூபாயிலிருந்து, ஒப்பிடும்போது தங்கம் விலையானது, தற்போதைய நிலையில் 5,280 ரூபாய் வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது.

 சரிந்து வரும் சர்வதேச பங்கு சந்தைகள்

சரிந்து வரும் சர்வதேச பங்கு சந்தைகள்

உலகளாவிய சர்வதேச சந்தையின் சரிவானது தங்கம் விலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக டாலரின் மதிப்பும் தடுமாற்றத்தில் உள்ளது. இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக இருந்து வருகிறது. ஆக இதற்கு மத்தியில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் இருந்து வருகிறது.

என்ன வருமோ என்ற எதிர்பார்ப்பு?

என்ன வருமோ என்ற எதிர்பார்ப்பு?

இன்று வரவிருக்கும் அமெரிக்காவின் பண்னை அல்லாத ஊதிய குறித்த தரவு வெளிவர இருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் அதற்காக காத்துக் கொண்டுள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் தரவுகள் எதிர்பார்ப்பினை விட அதிகரித்தால், டாலரின் மதிப்பு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  நிதி ஊக்கம் வழங்க வேண்டும்
 

நிதி ஊக்கம் வழங்க வேண்டும்

கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்காவின் ஃபெடரல் வங்கித் தலைவர், காங்கிரஸை நிதி ஊக்கத்தினை மேலும் வழங்குமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். நாணய கொள்கைகளை மேலும் தளர்த்தப்படும் என்றும் கூறியுள்ளனர். இது குறைவான வட்டி விகிதங்கள் லாபம் தராத பத்திரங்களை வைத்திருக்கும் வாய்ப்பினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் நல்ல லாபம் தரக்கூடிய தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான வட்டி விகிதம்

குறைவான வட்டி விகிதம்

ஏற்கனவே ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், மத்திய வங்கி சராசரி பணவீக்க இலக்கினை ஏற்றுக் கொள்ளும். அதாவது அவை நீண்ட காலத்திற்கு வட்டி விகிதம் அப்படி இருப்பதையே அப்படி கூறியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் குறைந்த வட்டி விகிதங்கள் என்பது தாக்கத்தின் விலையில் பிரதிபலிக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

 தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்

தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்

இதற்கிடையில் இந்தியாவில் தங்க பத்திர விற்பனையானது இன்றோடு முடிவடைய உள்ள நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். இது கிராமுக்கு விலையினை 5,117 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் தான் உள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 7.10 டாலர் அதிகரித்து 1944.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தொடர்ச்சியாக இரண்டு வர்த்தக தினங்களாக சரிந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையும் தங்கத்திற்கு இணையாக கடந்த சில மாதங்களாக வர்த்தகமாகி வரும் நிலையில், இன்று சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 0.027 டாலர்கள் அதிகரித்து, 26.902 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாகவே குறைந்த வெள்ளியின் விலையானது இன்று சற்று ஏற்றம் கண்டு காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக 10 கிராம் தங்கம் விலையானது 32 ரூபாய் அதிகரித்து, 50,790 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.10% ஏற்றத்தில் காணப்படுகிறது. தொடர்ச்சியான மூன்று நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலையானது இன்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. தங்கம் விலையானது இன்று அதிகரித்து காணப்பட்டாலும், இந்த மாத உச்சத்தில் இருந்து சுமார் 5,280 சரிவிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 209 ரூபாய் குறைந்து, தற்போது கிலோவுக்கு 66,710 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வரும் வெள்ளியின் விலை, தற்போது சற்று சரிவில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது சற்று குறைந்து இருந்தாலும் நீண்ட கால நோக்கில் ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆக இத்தகைய இறக்கமான நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால நோக்கில் நல்ல வாய்ப்பு தான். ஏனெனில் தங்கமானது பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பயன்படுத்தப்படுவதால், தங்கம் விலையானது, மீண்டும் உச்சத்தினையே தொட வாய்ப்புள்ளது. ஆக தங்கத்தினை எப்போதெல்லாம் விலை குறைகின்றதோ அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices starts to rise today, but it’s down Rs.5,280 from recent high

Gold prices again starts to increase today, but it’s down Rs.5,280 from august month high. So Its good chance to gold investors.
Story first published: Friday, September 4, 2020, 11:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X