அச்சச்சோ.. என்ன இப்படியாகிடுச்சு..தங்கம் விலை இன்று எப்படியிருக்கு தெரியுமா.. நிபுணர்களின் கணிப்பு?

தங்கம் விலையானது வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இந்த போக்கானது இனியும் தொடருமா? இன்று கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன?

இது மேற்கொண்டு எப்போது குறையும்? இந்திய சந்தையில் எப்படியிருக்கும்? முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு ? வாருங்கள் பார்க்கலாம்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது இன்றும் பாசிட்டிவாக காணப்படுகின்றது. வெள்ளி விலையும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு, முக்கிய லெவலான 1750 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு எவ்வளவு?

இலக்கு எவ்வளவு?

பெடரல் ரிசர்வ் வங்கி வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்க சந்தையானது இன்று விடுமுறை என்பதால் பெரியளவில் ஏற்ற இறக்கம் இருக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 52,400 ரூபாய் ஸ்டால் லாஸ் ஆக வைத்துக் கொண்டு, 52,750 ரூபாயினை இலக்காகவும் கொண்டு வாங்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எவ்வளவு அதிகரிக்கலாம்?

எவ்வளவு அதிகரிக்கலாம்?

அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்திற்கு பிறகு, கடந்த அமர்விலேயே தங்கம் விலையானது ஏற்றத்தில் முடிவடைந்தது. இது பெரும்பாலான நிபுணர்கள் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகளாவது அதிகரிக்கலாம் என கூறிய நிலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரவிருக்கும் டிசம்பர் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் ஆவது வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி சரியலாம்

வளர்ச்சி சரியலாம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே கடந்த அமர்வில் குறைந்தபட்ச விலையில் இருந்து மீண்டு வந்துள்ளன. அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கை ஒரு புறம் பணவீக்கத்தினை குறைக்கும் நடவடிக்கையாக இருந்தாலும், மறுபுறம் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மக்கள் கைகளில் பணப்புழக்கத்தினை குறைக்கலாம். மொத்தத்தில் வளர்ச்சி என்பது சரிவு பாதைக்கு செல்லலாம். ஆக இது தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் சாதகமாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 7.90 டாலர்கள் அதிகரித்து, 1753.50 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது 1.11% அதிகரித்து, 21.600 டாலராக காணப்படுகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 219 ரூபாய் அதிகரித்து, 52,670 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 543 ரூபாய் அதிகரித்து, 62,173 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாகவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 35 ரூபாய் அதிகரித்து, 4931 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 39,448 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை


இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து, 5378 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 370 ரூபாய் அதிகரித்து, 53,780 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு, 70 பைசா அதிகரித்து, 68.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து, 68,200 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+