பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக போர்ட்போலியோவில் 15% தங்கத்தினை வாங்கி குவித்துள்ளனர்.
உலகளாவிய சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக பிட்காயினில் முதலீடு செய்கின்றனர்.
தங்கம் விலை சாதகமாக மாறும்போது, கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் குறைந்துள்ளன. இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகள் பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
பாதுகாப்பு புகலிடம்
இந்த வீழ்ச்சி தொடர்ந்தால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கும். தங்கம் மீண்டும் கவர்ச்சிகரமானதாக மாறும். மொத்தத்தில் தங்கம் மீண்டும் பாதுகாப்பு புகலிடமாக மாறும். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு ஆதரவு
கடந்த மூன்று மாதங்களில் சந்தையானது ஒரு ரேஞ்ச் பவுண்டில் இருந்தது. எனினும் தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பணவீக்கமும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அதிகரிக்கலாம்.
முக்கிய லெவல் உடைப்பு
தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களை உடைத்துள்ளது. இதனால் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்துள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் தேவையானது இருமடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
வட்டி விகித நடவடிக்கை
விரைவில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நடப்பு ஆண்டில் நுகர்வோர் நம்பிக்கை மேம்படலாம். இதனால் நுகர்வும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
இன்று ஆபரண தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. சென்னையில் இன்று கிராமுக்கு 4533 ரூபாயாகவும், சவரனுக்கு 36,264 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்று ஆபரண தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. சென்னையில் இன்று கிராமுக்கு 4533 ரூபாயாகவும், சவரனுக்கு 36,264 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 4945 ரூபாயாகவும், சவரனுக்கு 39,560 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 49,450 ருபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளியின் விலையானது கிராமுக்கு 65.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 655 ரூபாயாகவும், கிலோவுக்கு 65,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சமீப நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த வெள்ளியின் விலை மத்தியில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?



Click it and Unblock the Notifications