உச்சத்தில் இருந்து ரூ.8,400 சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.. வாங்கலாமா.. வேண்டாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போகிற போக்கினைக் பார்த்தால் தங்கம் விலையானது மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டு விடுமோ? ஏனெனில் காலை அமர்வில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், மீண்டும் மாலை அமர்வில் ஏற்றம் கண்டு வருகின்றது.

இதற்கிடையில் இன்று காலை அமர்விலேயே சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. கடந்த இரண்டு வாராங்களாகவே, தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், குறையவே குறையாதா?

 ஓலா-வின் கிருஷ்ணகிரி தொழிற்சாலைக்கு ரூ.744.9 கோடி கடனுதவி.. BOB உடன் ஒப்பந்தம்..! ஓலா-வின் கிருஷ்ணகிரி தொழிற்சாலைக்கு ரூ.744.9 கோடி கடனுதவி.. BOB உடன் ஒப்பந்தம்..!

நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், அதற்கேற்ப தங்கம் விலையானது காலை அமர்வில் சரிந்தாலும், மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எப்படியுள்ளது? தங்கம் விலை இனி குறையுமா? குறையாதா? நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

காமெக்ஸ் தங்கம் நிலவரம்

காமெக்ஸ் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 4.40 டாலர்கள் அதிகரித்து, 1810.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது ஏற்பட்ட உச்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளதால், விலை சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை தடுமாற்றத்தில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. தற்போது 0.37% ஆதிகரித்து, 26.335 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சந்தை தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும். தற்போது 10 கிராம் தங்கம் விலையானது, கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 47,894 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 211 ரூபாய் அதிகரித்து, 69,586 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 14 ரூபாய் அதிகரித்து, 4,521 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 36,168 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 15 ரூபாய் அதிகரித்து, 4,932 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 39,456 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 74.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 74,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. .

 தங்கம் வாங்க சரியான நேரம்

தங்கம் வாங்க சரியான நேரம்

தங்கம் விலையானது கடந்த அமர்வில் ஒரு வார சரிவினைத் தொட்ட நிலையில், இன்று மீண்டும் உச்சம் தொட்டு வருகின்றது. அதிலும் இந்திய சந்தையினை பொறுத்தவரையில், இன்று அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 8,400 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, சில காரணங்களுக்கு மத்தியில் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. கடந்த ஆண்டில் கொரோனாவினால் தங்கம் வாங்குவது குறைந்திருந்த நிலையில், இது மக்களின் வாங்கும் திறனையும் பாதித்துள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம் தொடும்

தங்கம் விலை புதிய உச்சம் தொடும்

இதற்கிடையில் மக்கள் தங்கம் வாங்குவது இரண்டு தசாப்தங்களில் இல்லாதளவு குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஆண்டு அப்படியில்லை. தேவையானது மீண்டும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது மீண்டும் இந்த ஆண்டில் புதிய உச்சம் தொடலாம் என கூறி வருகின்றனர்.

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் குறையத் தொடங்கியிருந்தாலும், உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது பற்பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்ப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கலாம்.

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகிறது. எப்படியிருப்பினும் அமெரிக்காவின் முக்கிய டேட்டாக்கள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், அதன் தாக்கம் சந்தையில் இருக்கலாம் என்றும், இதன் எதிரொலி தங்கத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் பல காரணிகளும் தங்கம் விலை அதிகரிக்க ஏதுவான காரணிகளாகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் மாலை அமர்வில் முக்கிய டேட்டாக்கள் வெளியாகவிருக்கும் நிலையில் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices struggle, down Rs.8,400 from august month high, silver slightly trade higher

Gold price latest update.. Gold prices struggle, down Rs.8,400 from august month high, silver slightly trade higher
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X