தங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. மூன்றாவது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா?

தங்கம் விலை குறையவே குறையாதா? என்று எதிர்பார்த்தவர்களுக்கெல்லாம், சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலை மூன்றாவது நாளாக தட்டு தடுமாறிக் கொண்டுள்ளது.

சர்வதேச சந்தைகள் சற்று வலுவான நிலையில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சற்று குறைந்துள்ளது. எனினும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றிய கவலைகள் அதிகளவிலான சரிவினைக் தடுத்துள்ளன.

சரி இன்று தங்கம் விலை எப்படி உள்ளது? சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

மாடெனர்னா இங்க் தடுப்பூசி

மாடெனர்னா இங்க் தடுப்பூசி

ஏற்கனவே அமெரிக்காவின் பிப்சர் நிறுவனம் தனது தடுப்பூசி 99% வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் மாடெனர்னா இங்க் மருந்து நிறுவனமும், கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி 94.5% வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும், இந்த தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டாலர் Vs தங்கம் நிலவரம்

டாலர் Vs தங்கம் நிலவரம்

அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், அது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வர்த்தக அமர்வில் டாலரின் மதிப்பு 0.17% சரிவில், 92.477 ஆக முடிவடைந்துள்ளது. இது ஒரு வகையில் தங்கத்திற்கு ஆதரவு என்றாலும், டாலரில் தங்கம் வாங்கும் மற்ற கரன்சி நாடுகளுக்கு சற்று குறைவான விலையில் தங்கம் கிடைக்க வழிவகுக்கும்.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

அமெரிக்கா சந்தை சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், ஆசிய சந்தைகளும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது கொரோனா தடுப்பூசியின் காரணமாக சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது சந்தைக்கு ஆதரவாகவும், தங்கத்திற்கு எதிராகவும் காணப்படுகிறது. ஏனெனில் சந்தை ஏற்றத்தில் உள்ள நிலையில் முதலீட்டாளர்களின் கவனம் சற்றே சர்வதேச சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது.

ஊக்கத் தொகை விரைவில் கிடைக்கலாம்

ஊக்கத் தொகை விரைவில் கிடைக்கலாம்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், காங்கிரஸ் கட்சியினரை, கொரோனா ஊக்கத் தொகை பற்றிய முடிவினை எடுக்க அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக விரைவில் அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய சாதமான அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கா பொருளாதாரத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையும் முதலீட்டாளர்கள் கவனித்து கொண்டு தான் உள்ளனர். அதே சமயம் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைகளையும் கவனிக்கலாம்.

பொருளாதாரம் மேம்படும்

பொருளாதாரம் மேம்படும்

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் துணைத் தலைப் ரிச்சர்ட் கிளாரிடா, இரண்டு கொரோனா தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்க பொருளாதாரம் விரைவில் மீண்டு வர வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாகவும் தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளிலும், தங்கம் விலையானது சற்றே அழுத்தத்தில் காணப்படுகிறது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2.10 டாலர்கள் குறைந்து, 1886.85 டாலர்களாக காணப்படுகிறது. தங்கம் விலையினை பொறுத்த வரையில் bearish engulfing pattern பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், இன்று சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

தங்கம் விலையினைப் போலவே, சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலையிலும், bearish engulfing pattern பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், இன்று சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 0.13% சரிந்து, 24.770 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

MCX தங்கம் நிலவரம்

MCX தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. மூன்றாவது வர்த்தக நாளாக இன்றும் தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து, 50,786 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 50,830 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 50,800 ரூபாயாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. மூன்றாவது வர்த்தக நாளாக இன்றும் வெள்ளி விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 171 ரூபாய் குறைந்து, 63,520 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டாலும், தற்போது வெளியாகி வரும் பல செய்திகள் தங்கத்தின் விலையை சரிய காரணமாக அமையலாம். அதோடு, டெக்னிக்கல் பேட்டர்னும் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறையும் விதமாக காணப்படுகிறது. ஆக அதற்கேற்றாற்போல் முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+