செம சரிவில் தங்கம் விலை.. 6வது நாளாகவும் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் வாங்குவோருக்கு இது செம சான்ஸ் தான். கடந்த ஐந்து வர்த்தக தினங்களாகவே சரிந்து வந்த தங்கம் விலையானது, இன்று பெரியளவில் மாற்றம் காணாவிட்டாலும், இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது.

இன்று காலையில் ஏற்றத்தில் தொடங்கி மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது நிபுணர்கள் கூறியது போல் குறைந்த விலையில், முதலீட்டாளர்கள் வாங்கவே நல்ல சான்ஸ் என்றே கூறலாம்.

ஏனெனில் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறிவரும் நிலையில், இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?
 

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சரி இன்று சர்வதேச தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? என்ன காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவும் உள்ளன. நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? குறுகிய கால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

ஊக்கத் தொகை அறிவிப்பு

ஊக்கத் தொகை அறிவிப்பு

அமெரிக்காவின் ஊக்கத் தொகை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்னும் நிச்சயமற்ற நிலையே நிலவி வருகிறது. இதன் காரணமாக இது சந்தைக்கு வர தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதனால் தங்கம் விலையானது இன்றும் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஏனெனில் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பே இந்த ஊக்கத் தொகை தான். இது எவ்வளவு அறிவிக்கப்படும். பொருளாதாரத்தினை மீட்டெடுக்க இது பயன்படுமா? என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கையை கொடுத்த தடுப்புசி

நம்பிக்கையை கொடுத்த தடுப்புசி

ஒரு புறம் கொரோனா வழக்குகள் அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஏனெனில் இதன் காரணமாக டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்த நிலையில், அமெரிக்கா பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தினை கண்டன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் பக்கம் திரும்பினர். எனினும் ஊக்கத் தொகை என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது.

வாங்க சரியான இடம்
 

வாங்க சரியான இடம்

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்ட நிலையில், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் என்பதால் இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. ஆக இதன் காரணமாகவும் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே அதிக சரிவினை தடுத்துக் கொண்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

ஃபண்டமெண்டல் காரணிகள் குழப்பத்தில் உள்ள அதே நேரத்தில் தங்கத்தின் கேண்டில் ஸ்டிக் பேட்டர்னில், கடந்த சில தினங்களுக்கு முன்பே பியரிஷ் என் கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியது. இதனால் தங்கம் விலையானது குறுகிய கால நோக்கில் குறையும் விதமாகவே காணப்பட்டது. ஆனால் இன்று நேற்றைய முடிவு விலையை விட சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

Comex தங்கம் விலை நிலவரம்

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த நான்கு நாட்களாக சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்றும் சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 1.35 டாலர்கள் குறைந்து, 1860.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் விகிதமான 1848 டாலர்களை உடைக்கும் பட்சத்தில், இது இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1850 டாலர்களை தொட்டு விட்டு தற்போது, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Comex வெள்ளி விலை நிலவரம்

Comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போல் அல்லாமல் வெள்ளியின் விலை 0.37% ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளியின் விலை கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், தற்போது 0.37% அதிகரித்து. 24.137 டாலர்களாக அதிகரித்துள்ளது. வெள்ளி நேற்று 24.048 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 24.172 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

MCX தங்கம் நிலவரம்

MCX தங்கம் நிலவரம்

MCX தங்கத்தினை பொறுத்தவரையில் கடந்த ஐந்து நாட்களாகவே தொடர்ச்சியாக முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிந்து வந்த தங்கம் விலையானது, இன்றும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. சொல்லப்போனால் ஆறாவது நாளாக இன்றும் 10 கிராம் தங்கம் விலையானது 22 ரூபாய் குறைந்து, 49,970 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

MCX வெள்ளி நிலவரம்

MCX வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 119 ரூபாய் அதிகரித்து, 61,642 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையிலும் பியரிஷ் என் கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியிருந்த நிலையில், நேற்றைய முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஒரு கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 4,745 ரூபாயாகவும், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 37,960 ரூபாயாகவும் காணப்படுகிறது. தங்கம் வாங்குபவர்களுக்கு, இந்த குறைந்த விலையானது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலையும் நான்காவது நாளாக குறைந்து காணப்படுகிறது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 5,183 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 41,464 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியினை பொறுத்தவரையில் நேற்று கிலோவுக்கு 1600 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்று கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. இன்றும் கிராம் வெள்ளியின் விலையானது 66.50 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 66,500 ரூபாயாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices struggle in week weekend

Gold price update.. Gold prices continue to fall, further decline likely
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X