கடந்த சில வாரங்களாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
இது தங்கம் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறி வரும் நிலையில், இரண்டு வாரங்களாக சரிந்து வந்த தங்கம் விலை, கடந்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது.
தங்கம் விலையானது சற்று குறைந்தால் வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தொடர்சியாக இரு வாரங்கள் சரிவுக்கு பிறகு கடந்த வாரத்தில் நல்ல ஏற்றத்தினை கண்டது. இதற்கிடையில் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரே சந்தேகம் இப்போது வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்? என்பது தான்.

என்னென்ன பார்க்கபோகிறோம்?
அதெல்லாம் சரி இன்றைய சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இனி குறையுமா? இப்போது வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த வர்த்தக அமர்வில் தங்கம் விலையானது சரிவில் இருந்த நிலையில் முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்தது. இதற்கிடையில் இன்றைய தொடக்கத்திலும் அதற்கு கீழாகத்தான் தொடங்கியுள்ளது. எனினும் தற்போது தங்கம் விலை சற்று ஏற்றத்தில் உள்ளது. தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 3.85 டாலர்கள் அதிகரித்து 1843.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்றைய முடிவு விலையினை விட சற்று கீழாக தொடங்கியுள்ள நிலையில் இன்று விலை சற்று குறையும் விதமாகவே உள்ளது. இது தற்போது இல்லாவிட்டாலும், மாலை நேர வர்த்தகத்தில் குறையும் விதமாக உள்ளது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த ஐந்து வர்த்தக தினங்களாக சற்று தடுமாற்றத்தில் உள்ள வெள்ளியின் விலை, தற்போது சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலை 0.05% குறைந்து, 24.242 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது நேற்றைய முடிவு விலையினை விட சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
கடந்த சில வர்த்தக தினங்களாக சற்று ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வந்த தங்கம் விலையானது தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 163 ரூபாய் அதிகரித்து, 49,340 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று தொட்ட உச்சத்தில் இருந்து பார்க்கும் போது, 6860 ரூபாய் சரிவிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது கடந்த சில தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 114 ரூபாய் அதிகரித்து, 64,711 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சமான 77,700 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 13,000 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு வாங்கி வைக்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்
கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், அது விரைவில் அமலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதோடு கொரோனா தடுப்பூசியின் முடிவுகள், அது சர்வதேச அளவில் நிலவி நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து குறைய வாய்ப்பிருப்பதாக முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஊக்கத்தொகை பற்றிய எதிர்பார்ப்பு
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க, ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் வாரத்தின் முதல் நாளான இன்றும் சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் விலை ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

ஐரோப்பிய மத்திய வங்கி என்ன சொல்லபோகிறது?
ஒரு வழியாக அமெரிக்காவின் ஊக்கத்தொகை எதிர்பார்க்கப்பட்டாதைபோல அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கியில் ஊக்கத் தொகை குறித்தான அறிவிப்புகள் இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச பங்கு சந்தைகள் நிலவரம்
ஒரு புறம் அமெரிக்கா ஊக்கத் தொகை அறிவிப்புக்கு மத்தியில், சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலை அதிக ஏற்றத்தினை தடுத்து வருகின்றது. எனினும் அதிகரித்து வரும் பணவீக்கம் தங்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதால் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது.

வலுவடையும் டாலர் மதிப்பு
தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, தடுப்பூசி பற்றிய சாதகமான விஷயத்தினால் சற்று வலுவாக காணப்படுகிறது. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவுப்புகளும் வந்து விட்டது. ஆக இவையெல்லாம் அதிக விலையேற்றத்தினை தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்
ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க, இன்னும் சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடனே காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் இன்ட்டிரா டே வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.