தங்கம் வாங்க இது நல்ல வாய்ப்பு தான்.. 4வது நாளாக தொடரும் வீழ்ச்சி.. இனி எப்படி இருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ச்சியாக இன்றோடு நான்காவது நாளாக தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டு வர ஆரம்பித்துள்ளது. இது தங்கம் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் என்றாலே மிகுந்த நம்பிக்கையுள்ள முதலீடாக நினைக்கும், நம்மவர்களுகு, குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால் வேண்டாம் என்று சொல்வார்களா என்ன? நிச்சயம் பலரும் இந்த குறைந்த விலையில் வாங்க நினைக்கலாம்.

பட்ஜெட்டில் 2021ல் வெளியான இறக்குமதி வரி குறைப்பு காரணமாக இந்தியாவிலும் தொடர்ந்து விலை குறைந்து வருகிறது. இதனால் இறக்குமதி அதிகரிக்கும். விலை இன்னும் குறையலாம். எனினும் குறைந்த விலை அதிகம் பேரை வாங்க தூண்டும் என்பதால், இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் விலையானது முதலீட்டாளர்களை குஷிப்படுத்தும் விதமாக, தொடர்ந்து நான்காவது நாளாக சரிவினைக் கண்டு வருகிறது. ஆக முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம். ஏனெனில் குறைந்த விலையில் தங்கம் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளதே. அதிலும் வரலாற்று உச்சத்தில் இருந்து 9,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக நான்காவது நாளாக இன்றும் குறைந்து வருகிறது. இது இன்னும் குறையுமா? இன்று விலை எப்படி உள்ளது? விலை குறையுமா? எவ்வளவு குறையும்? சர்வதேச காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் உள்ளன. வெள்ளி விலை நிலவரம் என்ன? இனியும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கலாம் வாருங்கள்.

Comex தங்கம் விலை நிலவரம்

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது வாரத் தொடக்கமான இன்றும் சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 6.60 டாலர்கள் குறைந்து, 1816.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இதனால் இன்று குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 0.94% அதிகரித்து, 27.585 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 27.510 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 27.503 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 14 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 47,304 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் முந்தைய அமர்வில் 47,318 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 47,436 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 698 ரூபாய் அதிகரித்து, 69,815 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்து தான் தொடங்கியுள்ளது.

பத்திர லாபம்?

பத்திர லாபம்?

அமெரிக்க பத்திர சந்தையின் லாபம் அதிகரித்து வரும் நிலையில், டாலரின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சரிந்து வருகின்றது. அதிகளவில் லாபம் தரும் பத்திர சந்தையானது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் மூதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளன.

Array

Array

தங்கம் விலையானது 1875 - 1780 டாலர்களுக்கு இடையே வர்த்தகமாகி வருகின்றது. இந்த விலையில் ஏதேனும் ஒரு விலையை உடைக்கும் பட்சத்தில் தங்கம் விலையானது ஒரு பக்கமாக செல்லலாம். 1780 டாலர்களை உடைக்கும் பட்சத்தில், அது இன்னும் குறையும் விதமாக காணப்படுகிறது.

இதே இந்திய சந்தையில் தங்கத்தின் சப்போர்ட் விலை 46,220 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் விகிதம் 48,060 ரூபாய் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

அமெரிக்காவில் ஊக்கத்தொகை எதிர்பார்க்கப்படும் நிலையில், அது பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையலாம். சீனா மற்றும் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் தங்கம் விலையானது பெரியளவில் குறையாது என்றும் எதிர்பார்க்கலாம். அதோடு இந்த குறைந்த விலையானது தங்கம் வாங்க முதலீட்டாளர்களை ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாதகமான காரணிகள்

சாதகமான காரணிகள்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகள், மறுபுறம் அமெரிக்காவின் ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்புகள், இப்படி பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன. அதோடு அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றம் செய்யாது என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. ஆக இதுவும் தங்கம் விலை குறைய ஒரு காரணமாக அமையும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்ல விஷயமே. ஏனெனில் கேண்டில் பேட்டர்ன்களும் தங்கம் விலை இன்று சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices struggles for fourth day in a row, down Rs.9000 from record high

Gold price updates.. Gold price fall today, down Rs.9000 from record high
Story first published: Monday, February 15, 2021, 15:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X