Gold: தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்றும் சரிவிலேயே காணப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இது பலரின் மத்தியிலும் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் முக்கிய குறிகாட்டியான டாலரின் மதிப்பானது வலுவாக காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அழுத்தத்தில் காணப்படுகின்றது.
டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், இது டாலரின் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு விலையை அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.
ஒபெக்கின் முடிவு
ஒபெக் நாடுகளின் எண்ணெய் உற்பத்தி குறைப்பு முடிவால் தங்கம் விலையானது கடந்த அமர்வில் தொடர்ந்து சரிய ஆரம்பித்தது. எனினும் அது ரொம்ப நேரம் நிலைக்கவில்லை என்றே கூறலாம். . காலை அமர்வில் சரிய ஆரம்பித்த தங்கம், மீண்டும் மாலை அமர்வில் உச்சத்தினை எட்டியது. இன்னும் சொல்லப்போனால் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக அவுன்ஸூக்கு 1950 டாலர்களை எட்டிய தங்கம், முடிவில் 1983 டாலர் என்ற லெவலை எட்டியது. இன்று அது கிட்டதட்ட 2000 டாலர்களுக்கு அருகிலேயே காணப்படுகின்றது.
விலை அதிகரிக்கலாம்
தற்போது இன்ட்ராடேவில் மீடியம் டெர்மில் குறைந்திருந்தாலும் மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒபெக்கின் முடிவால் மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சி என்பது மந்த நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரவிருக்கும் அமர்வுகளில் அமெரிக்காவின் முக்கிய தரவுகள் முக்கிய கவனம் பெற்றவையாக உள்ளன.
தங்கத்திற்கு ஆதரவு
அமெரிக்காவின் கருவூலத் துறை செயல் ஜெனட் யெலன் ஒபெக்கின் முடிவானது, உலக பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் இருப்பதால், இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையால் மேற்கொண்டு பணவீக்கம் உயரலாம். ஆக இதுவும் நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
குறையும்போதெல்லாம் வாங்கலாம்
தங்கம் விலையானது தற்போது சற்றே சரிவில் இருந்தாலும், தொடர்ந்து 2000 டாலர்களை உடைக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். இது முக்கிய லெவலாகவும் பார்க்கப்படும் நிலயில் இதனை உடைத்து, அதற்கு மேலாக தங்கம் விலையானது தொடர்ந்து இருந்தால், அது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் பெரும்பாலான காரணிகள் தங்கம் விலை குறைந்தாலும், அதிகரிக்கலாம். விலை அதிகரிக்கவே ஆதரவாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக தங்கம் விலை குறையும்போது போதெல்லாம் வாங்கி வைப்பு நல்ல லாபம் பார்க்க உதவிகரமாக இருக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.70 டாலர்கள் குறைந்து, 1996.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்திருந்தாலும், பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும் வெள்ளி விலை சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.17% அதிகரித்து, 24.062 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் விடுமுறையாகும். எனினும் மாலை அமர்வு இருப்பதால் மாலையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகம் இருக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து , 5600 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து , 44,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து , 6076 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 650 ரூபாய் அதிகரித்து, 60,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 70 பைசா அதிகரித்து , 77.80 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து , 77,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications